உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

143

தெற்றிகள் தமிழ்நாட்டுத் திருக்கோயில் களின் உள்ளவாறே அமைத் திருந்தனர். தெலுப்பி என்னும் நகரத்தின்கண் அப்பாலோ’என்னும் பகலவனுக்குச் சமைத்த மாப்பெருங் கோயிலில் மூலத்தானத்தே, கருவறையிலே நிறுத்தப்பட்ட அக் கடவுளின் றிருவுருவத்திற்கு முன்னே எழுப்பிய வேள்வித் தெற்றி மேல் ஓவாது தீ எரிந்து கொண்டிருக்க வைத்து வழிபாடு ஆற்றிவந்தனர். இவ்வாற்றால், நாகரிக வாழ்க்கை யிற் சிறந்த கிரேக்கர் பண்டைக் காலத்திற் செய்து போந்த கடவுள் வழிபாடும் அனற்பிழம்பின் வாயிலாகவே

பட்டதெனும் உண்மை தெற்றென விளங்கா நிற்கும்.

சய்யப்

இனிக் கிரேக்கருக்கு அடுத்த நிலையில் அவரைப் பின் பற்றி அவர் போல் நாகரிக வாழ்க்கையின் மிக்கு வயங்கிய உரோமர்" தொழுது போந்த ஜூபிதர்" இடி மழை புயல் முதலிய னவாக வானின்கண் நிகழும் நிகழ்ச்சிகட்கெல்லாம் தலைவரென்றும், உயிர் வாழ்வோர் உயிர் துறந்தோராகிய எல்லார்க்கும் அவரே இறைவரென்றும், வலக்கையில் இடியும் இடக் கையிற் செங்கோலும் ஏந்தி நடுவுநிலை பிறழாமற் பகைமேற் செல்வோர்க்கு வெற்றியைத் தந்து எல்லா மக்களையும் பாதுகாப்பவரென்றும் சொல்லப்படு கின்றனர். இவர்க்குப் பெயராய் வழங்கிய ஜூபிதர் என்னுஞ் சொல் தேவபிதிர் என்னும் வடசொற்களின் திரபேயா மெனவும், ஒளிவடிவின னெனப் பொருடரும் தேவன் எனுஞ்சொல்லும் தந்தையெனப் பொருடரும் பிதிர் என்னுஞ் சொல்லும் ஒருங்கியைந்து 'ஒளிவடிவினனான தந்தை' என முதற் பருங்கடவுட்குப் பெயராய் அமைந்தனவென்று இவ்வாராய்ச்சி வல்ல கற்றோர் நுவலுதலின், உரோமர் கபிதோலின்2 என்னும் மலைமுகட்டின் மேல் எழில்பெற அமைத்த திருக்கோயிலில் வைத்து வணங்கிய அக்கடவுளும் ஒளிவடிவினனாய்க் கையில் அனல் ஏந்தி அடியார்க்கு வலந்தந்து அனைவோரையும் புரக்குஞ் சிவ பிரானேயா மென்பது நன்கு பெறப்படும். இருக்கு வேதத்தின் கண் இடிமழை புயற்காற்று முதலிய வான் நிகழ்ச்சிகட் கெல்லாம் தலைவரும், மிளிரும் ஒளிவடிவினரும், இருகால் நாற்கால் உயிர்கட்கெல்லாம் முதல்வரும், கையில் இடியெனப் படும் அனலை ஏந்திப் பகைவரைத் துரந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/168&oldid=1591499" இலிருந்து மீள்விக்கப்பட்டது