உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

மறைமலையம் - 28

தன்றிருவடிகளைக் களைகணா அடைந்தார்க்குப் பேரின்பம் நல்குபவரும் உருத்திரரே என முதன் மண்டிலத்தின் நாற்பத்து மூன்று நூற்றுப்பதினான்காம் பதிகங்களினும் இரண்டாம் மண்டி லத்தின் முப்பத்து மூன்றாம் பதிகத்தினும் ஏழாம் மண்டிலத் தின் நாற்பத்தாறாம் பதிகத்தினும் ஓதப்பட்டமை காண்க. ஒளிக்கடவுளாகிய ஜுபிதருக்கு வெண்மை நிறம் வாய்ந்த உயிர்கள் விருப்ப மாயினாற் போலவே, சிவபெரு மானுக்கும் வெண்ணிறமுடைய எருது உரித்தாதல் காண்க. உரோமர் தங்கோயில்களிற் பலிபீடங்கள் என்னும் வேள்வித் தெற்றி கள் அமைத்து அவற்றின்கண் எரிவளர்த்து அதன் வாயி லாகத் தங்கடவுளர்க்கு அவியூட்டி வந்தனர். இவ் வரலாற் றின் மெய்ம்மை

கொண்டு உரோமரும் ஒளிவழியாகவே முதல்வனை வணங்கிவந்தன ரென்பது நன்கறியப்படும்.

இனி இதுகாறுங் கூறிப் போந்த பழைய நாகரிக மாந்தர் போற் பண்டை நாகரிக வாழ்விற் சிறந்தவராகாவிடினும், இஞ்ஞான்று இந்நிலவுலகமியாங்கணும் அறிவினும் நாகரிக வாழ்வினும் தலைசிறந்து நிற்கும் ஆங்கிலர் யர்மானியர் என்னும் இருதிறத்தார்க்கும் முன்னோரான மக்கள் செய்து போந்த தெய்வ வழிபாடும் தமிழ் மக்கள் செய்து போதரும் வழிபாட் டோடு ஒப்புமையுடைத்தாதலும் ஒரு சிறிது ஆராய்ந்துணரல் இன்றியமையாததாகின்றது. ஆங்கில யர் மானியர்க்கு முன்னோர்கள் தீயூதோனியர்3 எனப்படுவர். இவர்கள் ஓடன்4 எனப் பெயரிய கடவுளை இறைஞ்சி வந்தனர். இக்கடவுட் பெயர் எல்லாம் வல்லவர் எங்கும் நிறைந்தவர் என்னும் பொருள்களை உணர்த்தா நிற்கும். இக்கடவுள் எல்லார்க்கும் எல்லாப் பொருள்கட்கும் அழகை அளிப்பவ ரென்றும், பாட்டையும் வெற்றியையும் நில வளத்தையும் அருளையும் வழங்குபவ ரென்றும், எல்லாத் தேவர்க்குந் தாயான ஒரு பண் டெய்வத்தைத் தமது பக்கத்தே வைத்திருப்பவ ரென்றும், ஒருவகை வேலேந்திய கையினராயும் ஞாயிற்றினைக் கண்ணாக வுடையராயு முள்ளவரென்றும் சொல்லப் படுகின்றனர். ஓடன் என்னுங் கடவுட்கு அடுத்த நிலையில் வைத்து அவர்களால் வழுத்தப்படும் தோர்5 என்னுந் தெய்வம் இடி மழை மின்னல் முதலியவற்றை ஆள்வதாய்ச் சினம் மிக்கதாய்த், தீயோரை ஒறுப்பதாய்த் திகழ்வதென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/169&oldid=1591500" இலிருந்து மீள்விக்கப்பட்டது