உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

மறைமலையம் - 28

முதல்வ னொளியை அதனினுஞ் சிறிது பரிய நீரின்கண் இறங்கவும் அதன்பின் அதனை நீரினும் பரிய கல்வடிவின்கண் இறங் கவும் பலகால் வேண்டுதலையே ‘மந்திரஜபம்’ என்றும், இங்ஙனஞ் செய்யுஞ் செயன்முறைகளையே அட்டபந்தன கும்பாபிஷேகம் என்றுங் கூறுவர். இம்முறைகளை நுண்ணி தாக ஆய்ந்தாராய வல்லார்க்கெல்லாம், அனற்பிழம்பு ஒன்றுமே இறைவனியற்கை யருள்விளக்கக் குறியா மென்பதூஉம், அக்குறியினோ டொப்பவே பருப் பொரு ளான கல் மரம் மண் செம்பு முதலியவற்றிற் றிருவுருவங்கள் அமைத்து வழிபாடாற்றப்படுகின்றன வென்பதூஉம் இனிதுணரக்

கிடக்கும்.

இத்துணையுங்

6

கூறியவாற்றால் தீப்பிழம்பின்கண்

றைவன் விளங்குதல் கண்டே தீயும் தீ வடிவாய் ஒளி வடிவாய் உள்ள ஞாயிறு திங்கள் முதலியனவும் பண்டைக்காலந்தொட்டு எல்லா நாடுகளிலும் இருந்த எல்லா மக்களானும் வணங்கப் பட்டு வந்தனவெனவுறும் இனித் தீயை அணுகி ஒப்பனை செய்து வழிபட இயலாமையின் அங்ஙனம் வழிபடுதற்குப் பேரன்பு உடையரானோர் தீப்பிழம்போடொத்துத் திரண்டு நீண்டு குவிந்த கல்வடிவினையும், தீயெரியுங் குழியை நிகர்த்த வட்டக் கல்லினையும் அமைத்து அவ்விரண்டையும் ஒன்றாகப் பொருத்திக் கடவுளின் அடையாளம் என்னும் பொருளைத் தரும் சிவலிங்கம் என்னும் பெயரையும் வைத்து அதனை வழிபட்டு வரலாயினார் எனவும் அறிந்து கொள் ளல் வேண்டும். இன்னும் கல் முதலானவற்றில் அமைக்கப் பட்ட சிவலிங்கத் திருவுருவத்திற்கு மூலம் வேள்விக் குண்டத்திற் கிளர்ந்தெரியும் தீப்பிழம்பும், அத் தீப்பிழம் பாகிய திருவுருவத்திற்கு மூலம் விந்துநாதவுருவங்களும் ஆமென்றும் அறிதல் வேண்டும். இவ்விந்து நாதங்கள் ஒலிவடிவில் ஓ என்னும் ஓசையாகவும், வரி வடிவில் ஓ என்னும் எழுத்தாகவும் பிள்ளை யார் சுழியாகவும் நிற்கும். இனி எல்லாம்வல்ல முதல்வன் விந்து நாதங்களில் நேரே இயைந்து விளங்குதலே யன்றி, நம்மனோர் பொருட்டு அவற்றின் வாயிலாக இவ் வுலகத்திற் காணப்படும் ஞாயிறு திங்கள் தீ என்னும் ஒளியுடைப் பொருள்களினும், தீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/177&oldid=1591508" இலிருந்து மீள்விக்கப்பட்டது