உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

151

பொருளை உற்று ஆராயின் தீப்பிழம்பு வடிவே இறைவற்கு உண்மை யடையாளமாதல் தெற்றெனப் புலப் படும். கல்முதலான பருப்பொருள் வடிவங்கள் இறைவனது இயற்கை அருள் விளக்கத்திற்கு இடமாக வயங்கும் தீவடிவி னின்றும் அவனருளொளியை இரந்து பெற்று அப்பருப் பொருள் வடிவங்களில் ஏற்றுதற் பொருட்டு அவ்வடிவங் களின் எதிரே வேள்விக்குண்டம் அகழ்ந்து அதனகத்தே தீ வளர்க்கின்றனர். தீயின்கண் உள்ள விளக்கம் மிக நுண்ணிய தாகலின் அது தன்னியல்போடு பெரிதும் முரணி நிற்கும் பரிய கல்வடிவிற் பாயாது; ஆகவே, ஒரு வாற்றாற் றீயினியல்போ டொத்தும் பிறிதொருவாற்றாற் கல்லினியல்போடு ஒத்தும் இரண்டிற்கும் நடு நிகர்த்ததாய் உள்ள ஒரு பொருள் அவ்விளக்கத்தைத் தீயினின்றும் ஏற்றுக் கல்லின்கண் உய்த் தற்கு இன்றியமையாது வேண்டப் படுகின்றது. அப்பெற்றித் தாம் பொருள் யாதோ வெனின் அது தண்நீரே யாம்; யாங்ஙனமெனில், நீர் கல்லினும் நெகிழ்ந்ததாய் இருத்தலின் அஃது அந்நுண்மையால் ஒரு புடை அனற் பிழம்பை ஒக்கும், இனித் தீயினும் நீர் தடிப்புடைய ய தாயிருத்தலின் அஃது அவ்வாற்றால் ஒருபுடை கல்லை யொப்பதாய் இருத்தலால் என்க. இவ்வியல்பிற்றாதல் பற்றித் தண்ணீரைப் புதிய மட்கலங்களில் நிரப்பி அவற்றை வேள்விக்குண்டத்து எரியும் தீயின் எதிரே வைத்துத், தீயின்கண் இயற்கையாய் விளங்கும் முதல்வன் ஒளியை ‘எளியேங்கள் பொருட்டு இந்நீரின்கட் புகுந்தருள்க என்று தக்கார் பலர் ஒருங்கு குழுமி வரையறுத்த சின்னாள்காறும் இடையறாது வேண்டுவர்; அங்ஙனம் வேண்டிய பின்னர் அவர் வேண்டு கோளுக்கு எளிவந்து முதல்வனொளி அந்நீரிற் புகும்; அதன் பின்னர் அம்மட் கலங்களின் நீரை எடுத்து எளியேங்கள் பொருட்டு ஐயனே இத்திருவுருவத்தின் கட் புகுந்து எழுந்தருளி அடியேங் கட்கு என்றும் அணுக்கராய் விளங்கியிருந்து அருள் வழங்கல் வேண்டும் என இரந்து வேண்டி அந்நீரை அத்திரு வுருவத்தின் முடிமேற் பெய்வர். இங்ஙனஞ் செயற்பாலன முற்றும் செய்து முடித்த பின்றான் கல்லாலமைக்கப்பட்ட அத்திருவுருவம் வழிபடுதற்கு ஏற்புடைத்தாகக் கொள்ளப்பட்டு வழிபாடாற்றப் படுகின்றது. அனற் பிழம்பின் கண் விளங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/176&oldid=1591507" இலிருந்து மீள்விக்கப்பட்டது