உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

மறைமலையம் - 28

குவிந்த கல் வடிவுதான் முதல்வற்கு அடையாள மென்ப தென்னை? வட்டம் நாற்கோணம் முக்கோணம் முதலான வேறு வேறு வடிவுகளுடைய கற்களை முதல்வன டையாளங்களாய்க் கோடல் ஆகாதோ? என்று வினாவு வார்க்கு அவர் விடை கூறமாட்டாது இடர்ப்படுவராதலின் அவர் உண்மை ஆராயும் மதுகையின்றிக் கூறுவன சிறிதும் பொருந்தா. கட்புலனாகா இறைவன் அருள் விளக்கத்தை ஒருவாற்றானாயினும்

நம்மனோர் உணர்தற்கு வாயிலாய் நங் கட்புலன் எதிரே இயற்கை விளக்கமுடைத்தாய்த் தோன்று வது அனற்பிழம்பு ஒன்றுமே யென்பது மேலே காட்டினா மாகலின் அஃதொன் றுமே இறைவன் முனைத்துத் தோன்றி உயிர்கட்கு எளிவந்து அருள் செய்தற்கு இடமாம். இங்ஙனம் அருள்ஒளி வாய்ந்த முதல்வன் தோன்றுதற்குரிய ஒளிப் பொருளான அனற்பிழம்பு திரண்டு நீண்டு குவிந்து மிளிர் தலின் அதனோடொப்பதாக நிறுத்திய கல்லும் அவ்வடிவே யுடையதாக எடுத்து நிறுத்தப் படுவதாயிற்று. இவ்வள வேயன்றிக், கல் அனல்போல் இயற்கை யொளியுடைய தன்மையாலும், மாணிக்கம் பளிங்கு முதலான விளக்க முடைய கற்கள் உளவேனும் அவை தீப்பிழம்புபோல் நுண்ணிய வியல்பு உடையவாதலின்றிப் பருப்பொருள்களா யிருத்தலாலும் கற்களாற் செய்த வடிவங்கள் ஏனைச் சமயத் தாராற் றகர்ந்து அழிக்கப்படுதல் போல அனற்பிழம்பு அழிக்கப்படாமை யாலும் இறைவனருள் விளக்கத்திற்கு வாயிலாய் அவனைக் கட்புலனெதிரே கண்டு வழிபடுதற் குரிய இயற்கை அடையாள மாய் நிற்பது தீப்பிழம்பு ஒன்றுமே யாமென்று கடைப்பிடிக்க. அல்லதூஉம், கல்லாற் றிரட்டி யமைத்த திருவுருவங்கள் நிறுத்திய திருக்கோயில்கள் எத்துணைச் சிறந்தனவேயாயினும் அவை உள்ளே விளக் காளி யின்றி இருளடைந்து கிடக்கு மாயின் அவற்றின் உட் செல்ல எவரேனும் விரும்புவரோ? அத்திருவுருவங்களின் இரு புடையினும் முன்பின்னும் நிரல் நிரலாகத் திருவிளக்கு கள் சுடர்ந்து ஒளிருமாயினன்றே அவை காண்டற்கும் வழி பாடாற்று தற்கும் இசைந்தனவாகின்றன! சைந்தனவாகின்றன! இதுவேயுமன்றித் திருக்கோயில்கள் அமைத்து அவற்றின்கட் கல்லாற்செய்த திருவுருவங்களை நிறுத்துகின்றுழிப் பண்டைக் காலந் தொட்டு ஆன்றோர் வழக்காய்ச் செயப்படுஞ் செயன் முறைகளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/175&oldid=1591506" இலிருந்து மீள்விக்கப்பட்டது