உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

149

அடையாளமாகச் செய்து திரண்டு நீண்டு தலை குவிந்த திருவுருவங்களை வைத்து வழிபாடாற்றுதல் சாலச்சிறந்த முறையாமென்பதூஉந் தெற்றென உணரப்படும். அஃதொக்கு மாயினும், திரண்டு நீண்டு தலைகவிந்த கல்வடிவமே, இறைவன் நேர்நின்று விளங்கும் வாயிலான ஒளியின் அடையாளமாதல் எற்றாற் பெறுதுமெனின்; கட்புலனாய் எரியுந் தீயின் வடிவோ டொப்பச் செய்து நாட்டப்படுதலின், அக்கல் வடிவு ஒளிவடிவின் குறியேயாதல் தேற்றமாம். ஒரு குழியிலிருந்து எரியுந் தீப்பிழம்பு சுற்றிலுந் திரண்டு நீண்டு குவிந்து நிற்றல் எவரும் அறிந்ததேயாம்; அங்ஙனமே அதன் அடையாள மாகக் கல்லிற் செய்து வைக்கப்படும் சிவலிங்க அருட்குறியும் சுற்றிலுந் திரண்டு நீண்டு தலைகுவிந்திருத்தல் கண்டு கொள்க. இலிங்கக் கல் தீப்பிழம் பிற்கும், அதன் அடியிற் பொருத்தப்பட்டிருக்கும் வட்ட வடிவமான பீடம் அத்தீப் பிழம்பு எரிந்து நிற்குங் குண்டத்திற்கும் அடையாளங்களாம், அனற் பிழம்பின் அடையாளமாக நாட்டப்படும் அருட் குறி கங்கை பொருநை முதலான யாற்றின் அடிப்படைகளினும் மலைகள் மலை முழைஞ்சுகளினும் இயற்கையாகவே திரண்டு நீண்டு குவிந்த வடிவினவாகக் கிடக்குங் கற்களாகிய சுயம்புலிங்கங்களும், அவ்வாறின்றிச் செயற்கையாக அவ் வடிவினவாகச் செய்தமைக் கப்படுங் கற்களாகிய செயற்கை லிங்கங்களும் என இரு பகுப்பில் அடங்கும். இனி இக் கல்வடிவுகளேயன்றிக் குவிந்து நீண்ட புற்கூறுவடிகள் சிற்சிலவும் சுயம்புலிங்கங்கள் என்ற வகுப்பில் வைத்து ஆங்காங்கு வணங்கப்பட்டு வருகின்றன; இங்ஙனமே ஆவின் செவி வடிவான குறிகளும் வழிபாடாற்றப்படுகின்றன. எவையே யானும் அவை அனற்பிழம்பின் வடிவை ஒருபுடை யொத்திருக்குமாயின், அவைதம்மை அருட்குறியாக நிறுத்தித்

னி

தொழுதல் வாய்ப்புடைத்தேயாம்.

ரு

னி, உருண்டு நீண்டு குவிந்த இயற்கைக் கல்வடிவும் அதுபோற் செய்தமைக்கப்படும் செயற்கைக் கல் வடிவுமே இறைவற்கு உண்மையடையாளங்களாமாகலின் அவை தம்மை வழிபடுதலே முறையாம், இவற்றின் வேறாக அனற் பிழம்பை அவற்கு உண்மையடையாளமாகக் கொண்டு வழி படுதல் பொருந்தாதென ஆராயாது கூறுவாருமுளர். திரண்டு நீண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/174&oldid=1591505" இலிருந்து மீள்விக்கப்பட்டது