உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

8. அம்மை அப்பர்

னிச் சிவபெருமான் திருக்கோயில்களிற் சிவலிங்க வடிவமேயல்லாமல், மக்கள் உருப்போல ஆண்பெண் வடிவாய் அமைந்த அம்மையப்பர் திருவுருவமுங் காணப் படுதல் என்னை? உலகங்களுக்கெல்லாம் ஒரு முதல்வரான கடவுள் மக்களைப் போல அங்ஙனம் ஆண் பெண் வடிவா யிருத்தல் அமையுமோ? மேலும் முதற்கடவுள் ஆண்பெண் வடிவினா ராயிருத்தலை எவருங் கண்டிலரா லெனின் நன்று சொன்னாய் மூவாண்டிலே திருஞான சம்பந்தப் பிள்ளை யார் அம்மை யப்பராய் எழுந் திருளித் தமக்கு அருள் புரிந்த சிவபெருமான் திருவுருவத்தைத் தெளியக் கண்டு அதனைப் பாடியிருக்கின் றாராகலின், எவரும் அதனைக் கண்டில ரெனக் கூறுதல் அடாது. இனி அவர்போல் அத்திருவுரு வத்தைக் காணும் பேற்றினை உடையரல்லாத நம்போல்வார் அதன் பெற்றி தேர்தற் பொருட்டு அதன் வரலாறு ஈண்டு ஒரு சிறிது விளக்குதும், நம்மனோர் ஊற்றுணர்வுக்கும் கண்ணுணர்வுக்கும் புலனாகும் பொருட்பண்புகளை நன்கா ராய்ந்து பார்ப்பின் அவை யெல்லாம் இரண்டாய்ப் பிரிந்து இருகூற்றிலே அடங்கும்; ஊற்றுணர்வுக்குப் புலனாவன வன்மை மென்மை: சூடு குளிர்ச்சி என்னும் இரு பகுப்பிலும், கண்ணுணர்வுக்குப் புலனாவன ஆண்மை பெண்மை: சிவப்பு நீலம் என்னும் இருபகுப்பிலும் அடங்கக் காண்கின்றோம். இவ்விரு வேறுணர்வுக்கும் புலனாகும் இந் நான்கு இரட்டை

களையும் மறித்தும் ஆராய்ந்து பகுப்பின் மறித்தும் இவை இருகூற்றில் அடங்கும்; வன்மைசூடு ஆண்மை சிவப்பு என்பன ஒரு பகுதியாயும், மென்மை குளிர்ச்சி பெண்மை நீலம் என்பன மற்றொரு பகுதியாயும் நிற்கும், இவ்விரு கூற்றிற்பட்ட பண்புகளையும் புறத்தே காணப்படும் இருவகைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/179&oldid=1591510" இலிருந்து மீள்விக்கப்பட்டது