உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

155

பொருள்களிற் றெளியக் காணலாம். அவை தீயும் நீருமாம். தீ வன்மையும் சூடும் ஆண்மையும் சிவப்பு நிறமும் உடையதாய்த் திகழும்; நீர் மென்மையும் குளிர்ச்சியும் பெண்மையும் நீல நிறமாய் உடையதாய் ஒழுகும். இவ்விருவகை இயல்பும் உயிர்ப் பொருள்களிடத்தும் காணப் படும். புன் முதல் மக்கள் தேவர் ஈறான எல்லா உயிர்களும் ஆண் பெண் என்னும் இருவகைப் பிறவியில் அடங்கி நிற்கின்றன; ஆண் எனப்படுவனவெல்லாம் வல் இயல்பு வாய்ந்தனவாயிருத்தலும் பெண் எனப்படுவன வெல்லாம் மெல்இயல்பு பொருந்தினவாயிருத்தலும் எங்குங் காணப் படும். ஆண்பெண் என்னும் பகுப்பு ஊர்ந்து செல்லும் உயிர்களிலும் மக்களிலுங் காண்கின்றமல்லது நிலை பெயராத புற்பூண்டுகளிற் காண்கிலமாலெனின்; புற் பூண்டு களிலும் ஆண்பெண் பிறவியுண்டென்றற்கு ஆண்பனை பெண்பனை யென்னும் வழக்கே சான்றாகலானும், இஞ்ஞான்றைப் பயிர்நூல்' வல்லார் புற்பூண்டு மரஞ் செடி கொடி முதலிய எல்லாவற்றிலும் ஆண் பெண் என்னும் பகுப்பு உண்டென்று நன்காராய்ந்து காட்டு தலானும், ஆண் பயிர்களிலுள்ள கருவானது வண்டுகளான் எடுக்கப்பட்டுப் பெண் பயிர்களின் கருவறையிற் சேர்க்கப்பட்டா லன்றி அவை பயன்றராமை கண் கூடாய் எவரும் அறியக் கிடத்த லானும் நிலையியற் பொருள் இயங்கியற் பொருளாகிய எல்லா உயிர்ப் பொருள்களினும் ஆண் பெண் என்னும் பகுப் புண்மை ஒரு தலையாமென்க. உயிருள்ளனவற்றில் ஆண் பிறவி யெல்லாம் வன்றன்மையும் பெண்பிறவியெல்லாம் மென்றன்மையும் உடையனவாய் இருத்தல் கொண்டு, உயிரில்லாத வற்றுள்ளும் வன்றன்மை யுடையதனை ஆண் என்றும், மென்றன் மையுடையதனைப் பெண் என்றும் வழங்குவர். தீ வலியதன்மை யுள்ளதாயிருத்தலின் அதனை ஆண் என்று கூறுதலும், நீர் மெல்லிய தன்மை யுளதாயிருத்த லின் அதனைப் பெண் என்று கூறுதலும் எவர்க்கும் உடம் பாடாம். தீ வெம்மையால் வன்றன்மையுள்ள தென்று கொள்ளப்படவே, அதனோடு ஒருங்கியைந்து நிற்கும் விந்து தத்துவமும், அவ்விந்து தத்துவத்தோ டொருங்கியைந்து நிற்கும் முதல்வனும் ஆண் வடிவுடைய அப்பனென்று கொள்ளப்படும். நீர் தண்மையால் மென்றன்மையுள்ள தென்று கொள்ளப்படவே, அதனோடு ஒருங்கியைந்து நிற்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/180&oldid=1591511" இலிருந்து மீள்விக்கப்பட்டது