உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

மறைமலையம் - 28

நாததத்துவமும், அந்நாததத்துவத்தோடு ஒருங்கி யைந்து நிற்கும் முதல்வியும் பெண்வடிவுடைய அம்மை யென்று கொள்ளப் படும். னி உலகத்தின்கட் காணப்படும் நிறங்களுக்கெல்லாம் முதலாவன சிவப்பு, நீலம் என்னும் இரண்டுமேயாம்; வ்விரண்டுந் தம்முள் ஏறியுங் குறைந்தும் பலவாறு கலத்தலால் வேறுபல நிறங்களும் தோன்றுகின்றன வென்று இஞ்ஞான்றை இயற்கைப் பொருள் நூலாருங்? கூறா நிற்பர். வெப்பமும் வன்றன்மையும் உடைய தீயின்கட் சிவப்புநிறமும், தட்பமும், மென்றன்மையும் உடைய நீரின் கண் நீல நிறமும் கண் கூடாய்க் காணப்படுதலால், ஆண் வடிவிற் காணப்படும் முதல்வனுக்குச் சிவப்பு நிறம் வாய்ந்த திருமேனியும், பெண் வடிவிற் காணப்படும் முதல்விக்கு நீலநிறம் வாய்ந்த திருமேனியும் உளவாதல் துணியப்படும். இதுபற்றியே தமிழ் மறையுள்ளும் "பொங்கழல் உருவன் பூதநாயகன்" எனவும், 'சிவனெனுநாமந் தனக்கேயுடைய செம் மேனி எம்மான் எனவும், “பொன்னார் மேனியன் எனவும், "செந்தழல் போல்வாய் சிவபுரத்தரசே” எனவும், முதல்வன் சிவந்த மேனியனாக வைத்துப் பரவப்படுவானா 6 யினன்; இனி இறைவியின் திருமேனி நிறம் நீலமாதல் “பைங் குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால், அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால், தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்த லினால், எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த, பொங்குமடுவில்” என்னுந் திருவாசகத் திருமொழியும் "நீலமேனி வாலிழைபாகத், தொருவன்” என்னும் ஐங்குறு நூற்றுக் கடவுள் வாழ்த்துச் செய்யுளும் இனிது விளக்கும் என்க.

6

66

அற்றேல், மேல் விந்துநாத இயல்புகளை விளக்கிய வழி விந்து வட்டவடிவிற்றென்றும் நாதம் வரிவடிவிற்றென்றுங் கூறப்பட்டமையானும்; “விந்துவும் நாதமும் மேவும் இலிங்க மாம், விந்துவ தேபீடம் நாதம் இலிங்கமாம்” எனவும் சத்திநற் பீடந் தகுநல்ல ஆன்மா, சத்திநற் கண்டந் தகுவித்தை தானாம், சத்திநல் லிங்கந் தகுஞ்சிவ தத்துவம், சத்திநல் லான்மா சதாசிவந்தானே" எனவும் போந்த திருமந்திரத் திருப்பாட்டு களானும், “சத்தியுஞ் சிவமுமாய தன்மையிவ் வுலகமெல்லாம், ஒத்தொவ்வா ஆணும் பெண்ணும் உயர்குண குணியுமாகி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/181&oldid=1591512" இலிருந்து மீள்விக்கப்பட்டது