உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

157

வைத்தனன் அவளால் வந்த ஆக்கம் இவ் வாழ்க்கை யெல்லாம், இத்தையும் அறியார் பீட லிங்கத்தின் இயல்பும் ஓரார்” என்னுஞ் சிவஞான சித்தித்திருப்பாட்டானும் வட்டவடிவுடைய விந்து சத்தி தத்துவமென்றும் வரி வடிவுடைய நாதம் சிவதத்துவமென்றும் அங்ஙனமே பெறப் பட்டமையானும் விந்துவைப் பெண் எனவும் நாதத்தை ஆண் எனவுங் கூறல் வேண்டும்; மற்று அதற்கு மாறாக விந்துவை ஆணென்றும் நாதத்தைப் பெண்ணென்றும் ஈண்டுக் கூறிய தென்னை யெனின்; சத்தி சிவங்கள் தமக்குள் வேற்றுமையின்றிப் பண்பும் பண்பியும் போல் தற்கிழமைப் பட நிற்றலாற் சத்தி ஒரு காற் சிவமாயும், சிவம் ஒருகாற் சத்தியாயும் நிற்கும்; இவ்வுண்மை,

“சத்திதான் நாத மாதி தானாகுஞ் சிவமும் அந்தச் சத்திதான் ஆதி யாகுந் தரும்வடி வான வெல்லாஞ் சத்தியுஞ் சிவமு மாகுஞ் சத்திதான் சத்த னுக்கோர் சத்தியாஞ் சத்தன் வேண்டிற் றெல்லாமாஞ் சத்தி தானே'

என்றும்,

وو

“சிவஞ்சத்தி தன்னை யீன்றுஞ் சத்திதான் சிவத்தை யீன்று முவந்திரு வரும்பு ணர்ந்திங் குலகுயிர் எல்லாம் ஈன்றும் பவன்பிரம சாரி யாகும் பான்மொழி கன்னி யாகுந்

தவந்தரு ஞானத் தோர்க்கித் தன்மைதான் தெரியு மன்றே,"

என்றும் சிவஞானசித்தியாரிற் கூறப்பட்டமையாற் றெளியப் படும், தொழிற்படுங்கால் விந்து வட்டமாயும் நாதம் வரியாயும் நடத்தலால் அவ்வடிவு வேற்றுமை கருதி அவை பெண் ணென்றும் ஆணென்றும் சொல்லப்படும்; மற்று அவற்றின் இயற்கையை உற்று ஆராயுங்கால் விந்து வெம்மை யுஞ் சந்நிறமும் உடையதாய்க் காணப்படுதலின் அவ்வாற் றான் அஃது ஆண் எனவும் நாதம் தண்மையும் நீலநிறமும் உடை WI தாய்க் காணப்படுதலின் அவ்வாற்றான் அஃது பெண்ணெனவும் வைத்து உரைக்கப்பட்டன. ஆதலின் அது முன்னதனோடு மாறுகோள் அன்மை உணர்க. பிரிவின்றி நிற்றலாற் சிவத்தின்றன்மை சத்தியினுஞ் சத்தியின்றன்மை சிவத்தினும் விரவித் தோன்றா நிற்கும். ஞாயிற்றின் ஒளியொன்றே தன்னில்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/182&oldid=1591513" இலிருந்து மீள்விக்கப்பட்டது