உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

மறைமலையம் - 28

நிற்குங்காற் செந்நிறமும் வெப்பமும் உடைத்தாய் விந்து தத்துவத்தின்பாற் படுதலும், அது திங்கண் மண்டிலத்தில் வீசுங்கால் ஆண்டு ஒரு சிறு நீலநிறமும் தட்பமும் உடைத்தாய் நாததத்துவத்தின்பாற் படுதலும் நேரேயுங் கண்டு கொள்க. இஞ்ஞான்றை இயற்கைப் பொருணூலாரும் மின்னொன்றே இயங்கும் வகையால் உடன்பாடாயும்3 எதிர்மறையாயும்4 ருதிறப் பட்டு ஒன்று வெய்யதாயும் ஒன்று தண்ணியதாயுங் காணப் படும் என்று விளங்க உரைப்பர்.

இனி, நங் கட்புலனுக்கு எதிரே விளங்கும் திக்கொழுந் தின் கண் இவ் ஆண்பெண் வடிவ இயல் நன்கு தெளியப்படும். தீ வெய்யதாயும் செந்நிறத்ததாயும் ஒளிருதலின் அஃது ஆண் வடிவாதல் தேற்றமேயாம்; மற்று அதன் கட்டண்ணிய நீலப் பெண்வடிவு காணுமாறு யாங்ஙனமெனின்; தீக்கொழுந்தின் அகத்தை உற்றுக் காண்பார்க்கு ஆண்டு நீலநிறமுள்ள தொன்றும் உடன் கலந்து நிற்றல் புலனாகும்; நீலநிறமுடைய அவ் அகப்பகுதி தண்ணிய நீரின் பகுதியோயாம் என்று துணிதற் பொருட்டு ஒருசிறு பளிங்குக் கிண்ணத்தை அவ்வனற் காழுந்தின்மேற் கவிழ்த்துப் பிடித்தால் சில நேரத்தில் அக் கிண்ணத்தின் விளிம்பிலிருந்து நீர்த்துளி சிந்து வதைக் கண்டு கொள்ளலாம். ஆகவே, தீயினுள் நீர் விரவியுள தென்பது மறுக்கப்படாத உண்மையேயாமென்க. இவ்வாறு அனற் பிழம்பின் ஒளியில் நீல நிறமும் விரவித் தண்ணீரும் ஆண்டு உண்டென்றற்கு ஓர் அறிகுறியாய் நிற்றலால், தீவடிவு ஆண்பெண் வடிவு ஒருங்குகலந்து காணப்படும் ஓர் ஒப்பற்ற அடையாளமாய்த் தன்கண் முனைத்து விளங்கும் முதல்வன் இயல்பைத் தெற்றெனப் புலப்படுத்துவ தொன்றாம் என்க. இதனிலிருந்தே, செந்நிறம் ஒளிரும் ஆண்வடிவு வாய்ந்த சிவபெருமானையும், அப்பெருமானுக்கு இடப் புறத்தே நீலநிறம் மிளிரும் பெண்வடிவு வாய்ந்த உமையம்மை யாரையும் பிரிவற வைத்து வழிபடும் ஒழுகலாறு பண்டு தொட்டு நடைபெற்று வருகின்றது.

வ்வாறு தீவடிவின்கண் முதல்வனியல்பை அறிந்து சிவபிரானையும் உமையம்மையாரையும் ஒருங்கு வைத்து வழிபடும் முறை அறியப்பட்டாற்போலவே, தீமண்டில மாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/183&oldid=1591514" இலிருந்து மீள்விக்கப்பட்டது