உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

159

ஞாயிற்றிலிருந்து சிவபிரானியல்பை வானின்கட் கண்டு வழிபடுமாறும் முன்னையோரால் அறியப்பட்ட தென்பதூஉம் ஒருசிறிது காட்டுவாம். ஒளிசிறந்த ஞாயிறு மேற்றிசையிற் சாயுங்கால் மேல் பாலுள்ள விசும்பிட னெல்லாம் செவ்வொளி படர்ந்து பொலிய, அவ்வொளியிற் றோய்ந்த முகிற்படலங் களும் செக்கச் செவேலென்று வயங்க, அப் படலங்களி னிடையே தோன்றும் நகு வெண்பிறையும், அப்போழ்து சுடரொளி வீசி அத்திசையிற் சாய்ந்து நிற்கும் ஞாயிறும் சிவபிரான்றிரு வுருவத்தை விளங்கக் காட்டுதல் காண்க. மாலைக்காலத் தோற்றத் தில் செவ்வொளி கிளரச் சாய்ந்து றிருமுகத்தினையும்,

திகழும் ாயிறு சிவபெருமான்

ம்

அவ்வொளியிற் றோய்ந்த சிவந்த முகிற்படலம் அப்பெருமானது செக்கர்ச் சடையினையும், அம்முகிற் படலத்திடையே விளங்கும் இளவெண் பிறை அவனது செஞ்சடையில் வைகும் வெண்பிறை யினையும் நிகர்த்துக் கட்புலனாகாக் கடவுளைக் கட்புல னெதிரே காட்டுவவாயின. மாலைக்காலத்திற் றோன்றும் இச் சிவபிரான்றிரு வுருவத்தோடு ஒன்றுபட்டுத் துலங்கும் நீலவானமே உமையம்மையாரின் திருவுருவத்தினை ஒப்ப தாம் என்க. விடியற் காலையிற் கீழ்த்திசையிற்றோன்றும் ஞாயிறு வெய்யதன்றாய் நீலநிறமுடைய கடலினருகே எழுதலால் அஃது அம்மையின் றிருவுவாக வைத்துப் பண்டை யோரால் தொழப் படுவதாயிற்று. காலை ஞாயிற்றி னுக்கு வழங்கும் சாவித்திரி எனும்பெயர் உமையம்மையாரின் பெயர்களுள் ஒன்றாகவும் சாவித்ர:எனும் பெயர் சிவ பெருமான் பெயர்களுள் ஒன்றாகவும் வைத்து வட நூல் களுள் வழங்கப்படுதலை ஆராய்ந்து காணவல்லார்க்குக் காலைமாலையிற் காணப்படும் ஞாயிற்றின் வடிவிலிருந்தே அம்மையப்பரான உமாமகேசுரரை வழிபடும் ஒழுகலாறு போதரலாயிற்றென்னும் வாய்மை நன்கு விளங்கும்.

ஈண்டுப் பிறிதோர் உண்மையும் எடுத்துரைக்கற்பாற்று. விடியல் ஞாயிறு கடலருகே தோன்றி யாண்டும் பேரொளி பரப்புதலால் அது விஷ்ணுவென்றும் இருக்கு வேதத்தில் பகரப்படுவதாயிற்று. காலை ஞாயிறு வெம்மையின்றிக் கடற்பக்கத்தே தோன்றுதல்பற்றிப் பெண்பாலாகக் கூறப்படுத லின், அஞ்ஞாயிற்றின் பெயரிலிருந்து பிற்றை ஞான்று ஒரு

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/184&oldid=1591515" இலிருந்து மீள்விக்கப்பட்டது