உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

மறைமலையம் - 28

தனித்தெய்வமாகக் கொண்டாடப்படும் விஷ்ணுவும் பெண் பாற்குரிய இயல்பும் கரியநிறமுடையராகவும், உமையம்மை யாரோடுடன்பிறந்தாராகவும் புராணங்களிற் புனைந் துரைக்கப் படுகின்றார். இப்புனைந்துரைளை விடுத்து அவற்றின் உண்மை காணப் புகுவார்க்குக் குளிர்ந்த காலைப் பொழுதிற்றோன்றும் ஞாயிற்றின் தெய்வதமே அம்மை யெனவும் விண்டுவெனவும் வைத்து வழிபாடாற்றப்பட்ட தென்பதூஉம், வெவ்விய மாலைக் காலத்தில் மேல்கடல் புகும் ஞாயிற்றின் தெய்வதமே உருத்திர மூர்த்தியாகிய அப்பனெனத் தொழப்பட்ட தென்பதூஉம் இனிது விளங்கா நிற்கும்.

விஷ்ணு வெனப் பெயரிய ஞாயிறு செல்லும் வழியாக லின் வானம் விஷ்ணுபாதம் என்று நூலான் நுவலப்படும். பாதம் எனினும் வழியெனினும் ஒக்கும். ஞாயிறு காலை நண்பகல் மாலை என்னும் முப்பொழுதினும் வானிடத்தை மூன்று கூறாக அளந்து செல்லுதலின் தனை விண்டு மூவடியான் விசும்பினை அளந்தான் என்று புராண நூல்கள் புனைந்துரைக்கும். இதுவேயுமன்றி நிலத்தின் கண் உள்ள கடல் நீரும்பிறவும் ஞாயிற்றின் வெம்மையால் ஆவியாகமாறி விசும்பின்கட் டங்குதலையே கங்கைநீர் விஷ்ணு பாதத்திற் றங்குகின்றது எனவும் விசும்பின் கண் உலவும் முகிற் படலத்தில் அந்நீர் இருத்தலையே விஷ்ணு பாதத்தில் உள்ள நீரை உருத்திரர் தமது சடைமுடியில் ஏற்றார் எனவும் உண்மையைத் திரித்து உரைப்பர். முகிற்படலம் உருத்திர மூர்த்தியின் சடைமுடியாகக் மேலே விளக்கினாமாகலின் அதனிற்றங்கு நீரைச் சடை முடியில் வைகுங் கங்கையாக உரைத்தலும், விஷ்ணுபாதம் என்பது வானமேயாகலின் அதனில் உலாவும் நீராவியை விண்டுவின் அடியில் வைகுங் கங்கையாகக் கூறுதலும், வானில் உலவும் நீராவியே முகிற்படலமாகலின் விண்டு பாதகங்கையை உருத்திரர் சடைமேலேற்றா ரென்று கூறுதலும் உண்மையை மறைத்துரைக்கும் புனைந்துரைகளே யாகலின் இவற்றின் மெய்ம்மை தேறாது சைவசமயத்தை இகழ்ந்து செருக்கும் அறிவிலார் திறம் பெரிதும் இரங்கற்பால தொன்றாம். விஷ்ணு வென்பது எங்கும் நிறைந்த ஒளியினையுடைய ஞாயிற்றினுக்குப்

கொள்ளப்படுதலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/185&oldid=1591516" இலிருந்து மீள்விக்கப்பட்டது