உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

161

பெயராதல் பண்டை இருக்கு மறையால் நன்கு தெளியப் படுதலின், அவ்வுண்மையோராது அதனை ஒரு தனித் தெய்வ மாகக் கொண்டு அதற்கு இறப்புப் பிறப்புகள் கற்பித்ததனோடு அமையாது அதனைச் சிவத்தினுள் மேற்பட்டதாகவும் பொருந்தா வழக்குத் தொடுத்து வெற்றாரவாரம் புரிவார் புன்மை பெரிதும்

நகையாடி

மற்றென்னை! அது கிடக்க.

விடுக்கற்பாலதாமன்றி

அற்றேல், வன்றன்மை மென்றன்மை இரண்டும் முழு முதற் கடவுள் மாட்டுக் காணப்படுதல் கொண்டு அவரை ஆண்பெண் வடிவுடையராகக் கூறுதல் பொருந்துமாயினும், மக்கள்பாற் காணப்படும் ஆண்பெண் வடிவ வேற்றுமை யினை அவர்க் கேற்றுதல் வழுவாமாலெனின்; அற்றன்று, மக்களுக்குள்ள அவ்வடிவ வேறுபாடு குற்றமுடைத் தாயினன்றே அதனைப் போல்வ தொன்றுஇறைவற்குக் கற்பித்தல் வழுவுடைத்தாம்; மற்று மக்களுடம்பின்கண் விரும்பற்பாலது பெரிதும், வெறுக்கற் பாலது சிறிதுமாயிருத் தலின் வெறுப்புணர்வினைப் பயக்கும் வாலாமை முழுதும் நீங்கிய தூயமக்கள் உடம்பு ஒன்று உளதாயின் அதனை இழித்துப் பேச எவரேனும் முந்துவரோ? நரை திரை மூப்புப் பிணி முதலான குற்றங்கள் சிறிதுமின்றித், தீயநாற்றம் வீசும் கழிவுகளும், தீய தன்மைகளும் அற்றுப் பேரழகும் பெரு நலனும் பேரொளியும் அமைந்த தூய ஓர் ஆண்மகனை யேனும் அல்லதொரு பெண்மகளையேனும் காண்டல் கூடுமாயின் அத்தூயவடிவத்தை எவரேனும் பழித்துப் பேசுவரோ! இத்துணைத் தூய்மையும் அழகும் நலனும் வாயாரேனும், ஏனை மக்களினுஞ் சிறந்தாராய்த் திகழுஞ் சிற்சிலரைக் காணினும் அவரைக் காண்பாரெல்லாம் அவர் பால் அன்பும் அடக்கமும் வியப்பும் வணக்கமும் அச்சமும் உடை டயராய் ஒழுகுதலைக் காண்கின்றேம் அல்லேமோ! மக்கள் வடிவு வாலாமையுடைமை பற்றியே சிறிது இழிக்கப் படுமேனும், மற்று அதன்கட் காணப்படும் அமைவும் அழகும் நலனும் பற்றி அஃது எத்திறத்தவரானும் வியந்து புகழப்படும் பெற்றியதாகவே விளங்கா நிற்கின்றது. மக்கள் வடிவினையும் அதனையொத்த வேறு உருவங்களையும் ஆராய்ந்து பாராமல் அளவிறப்ப இகழ்வார் சிலர் உள ரேனும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/186&oldid=1591518" இலிருந்து மீள்விக்கப்பட்டது