உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

மறைமலையம் - 28

அவரும் தம்மால் அன்பு பாராட்டப் பட்டார் இறந்து பட்டவிடத்து அவரது வடிவத்தைக் காணப் பெறாமையாற் பெரிதும் ஆற்றாமையுடையராய்த் தம்மை மறந்து கண்ணீர் வடித்து அழுதலென்னை! உருவத்தை இகழ் வோர் தமதுடம்பினை மாய்த்தற்குப் பெரிதும் அஞ்சுவ தென்னை! தமதுடம்பு ‘புழுநெளிந்து புண் அழுகி யோசனை நாறுங், கழிமுடை நாற்றத்ததாய்' நோயால் நைகின்றுழியும் அதனை அவர் விடுத்தற்கு மனமிலராய் நெட்டுயிர்ப் பெறிதலென்னை! உருவத்தை இகழ்ந்து அதன்பால் அன்பு பாராட்ட மனங்கூசுவோர் உருவமில்லாத வெறுவெளியில் அன்புவைத்து மனம் மகிழக் கண்டதுண்டோ! என்று உணர்ந்து பார்ப்பின் ருவத்தாலன்றி மக்கள் இம்மை மறுமைப் பேற்றினையடைதல் செல்லாதென்பது விளங்கும். எனவே, உருவமாய் அமைதலிற், குற்றம் சிறிதுமில்லை யென்பதூஉம், உருவமாய்வரும் பொருள்களிற் காணப்படும் வாலாமை பற்றி உருவத்திற்குக் குற்றம் ஏற்றுதல் அடா தென்பதூஉம், உலகின்கட் காணப்படும் எல்லா வடிவங் களிலும் மக்களுடம்பின் வடிவே மிகச் சிறந்ததாயும் அழகின் மிக்கதாயும் இருத்தலின் அதனோ

த்ததாக வைத்து இறைவனுருவத்தை வழிபடுதல் சாலவும் விழுமிய முறையே யாமல்லது ஒருவாற்றானும் இழிக்கப் படுவதன் றென்ப தூஉம் பெறப்படும். அற்றேல், மக்களுடம்பிற் காணப்படுங் கழிவுகளும் வாலாமையும் இறைவன் உருவத் திற்கும் உண்டாங்கொல்லோவெனின்; இறைவனுடம்பில் வாலா மை சிறிதுந் தீண்டப்பெறாதென்று கடைப்பிடிக்க, நம்ம னோருள்ளும் அழகானும் நலத்தானும் சிறந்தாராய், ஏனை யோரினும் பார்க்கக் கழிவுகளும் வாலாமையுங் குறைந்தா ராய், நறுமணங்கமழும் தூயஉடம்புடைய ஆடவர் சிலரும் மகளிர் சிலரும் ஆண்டாண்டு உளராதலைக் கண்டுங் கேட்டும் இருக்கின்றேம். இருவினைப் பயத்தால் அசுத்த மாயையிற் றிரட்டப்பட்ட நம்மனோர் உடம்புகளுள்ளும் இத்துணை ஏற்றத் தாழ்வுகள் காண்குவமாயின், இருவினைக் கட்டு நீங்கிச் சுத்தமாயையிற் றிரண்ட விந்துநாத ஒளி உடம்புகளில் வைகும் அநந்தேசுவரர், மகேசுவரர், சதாசிவர் முதலான கடவுளரின் திருவுருவ மாட்சியினையும் அதன் றூய தன்மையினையும் நாம் வரையறுத்துச் சொல்லல் இயலுமோ! இறைவன்றிருவுருவம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/187&oldid=1591519" இலிருந்து மீள்விக்கப்பட்டது