உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

163

சதாசிவர் முதலான கடவுளர்க்குரிய உருவங்களை ஒரு புடையொத்து, அவற்றி னுங் கழிபெருஞ் சிறப்பிற்றாகிய தூய்மையுடைய தொன்றா கலின் அஃது ஒருவாற்றான் நம்மனோர்க்குள்ள ஆண்பெண் வடிவு போறல்பற்றி இதனையொத்த வாலாமையுடைய தாதல் யாங்ஙனமென

மறுக்க.

இனி, இறைவன் சத்தி சிவம் முதலான தூயதத்துவங் களிற் றிருமேனிகொண் டருளுவதும், சதாசிவர் மகேசுவரர் அநந்தே சுவரர் முதலானோர் திருவுருவங்களை இடமாகக் கொண்டு நின்றருளுவதும், ஞாயிறு திங்கள் தீ முதலான ஒளியுடைப் பொருள்களில் விளங்கி நின்றருளுவதும் காணவுங் கருதவும் படாததன் னியல்பை நம்மனோர் காணவுங் கருதவுமாம்படி வைத்து வழிபட்டு உய்தற் பொருட்டே யாமாகலின் இத் தத்துவத் திருமேனிகளெல் லாம் முதல்வற்குத் தடத் தலக்கணம் என்னும் பொது வியல்பேயாகும்.

இனி இப்பொதுவியல்பின் வேறாகிய சொரூபலக்க ணம் என்னும் சிறப்பியல்பால் முதல்வற்கே உரிய வேறு திரு வுருவமும் உண்டென்பதூஉம், அது சுத்தம் அசுத்தம் என்னுந் தத்துவங்களிற் சிறிதுந் தோயாது தனித்து நிற்குமென்பதூஉம் ஈண்டு ஒரு சிறிது ஆராய்ந்துரைத்தல் வேண்டும். அறிவுப் பொருளும் அறிவில் பொருளும் எனப் பொருள்களெல்லாம் இரு கூற்றிலே அடங்கும். அறிவுப் பொருளே அறிவில் ரு பொருளாய்த் திரியு மென்று கூறுவாரும், அறிவில் பொருளி லிருந்தே அறிவுப் பொருள் உண்டாமென்று கூறுவாரும், முதற்கண் ஆற்றல் ஒன்றுமே நிற்க அது பின்னொருகால் அறிவுப் பொருளாயும் அறிவில் பொருளாயும் காணப்படுவ தாயிற்றென்று கூறுவாருமாய்ச்சிற்சிலர் ஆங்காங்கு உளரேனும் இவர் கூறுவன வெல்லாம் கண்கூடாய் நிகழும் நிகழ்ச்சிகட்கு ஒரு ரு சிறிதும் பொருந்தி வராமையானும், இவ்விரு கூற்றுப் பொருளுண்மையைக் கடைமுறையாய்ப் பிழைபடாமல் ஆராய்ந்து கண்ட இயற்கைப் பொருணூற் புலவர் ஒருவர் அறிவில் பொருளி லிருந்து அறிவுப் பொருள் தோன்றா தனவும், இரண்டும் இருவேறு பொருள்களே யெனவும்

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/188&oldid=1591520" இலிருந்து மீள்விக்கப்பட்டது