உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

மறைமலையம் 28

முடிபுகட்டியிருத்த லானும் அவை இரண்டும் தனித்தனி வேறு வேறு பொருள் களேயாமென்று கடைப் பிடிக்க.

இனி எங்கெல்லாம் வடிவு திரண்ட பொருள் உண்டோ அங்கெல்லாம் அவ்வடிவினை அதன்கட் டோற்றுவிக்கும் ஓர் அறிவுப் பொருள் அதற்குக் காரணமாய் வேறு உண்டென்ப தும் துணியப்படும். அழகியதோர் உருவமைந்த அரண் மனையைக் கண்டால் அவ்வமைப்பினை அங்குவருவித்த அறிவுடையான் ஒருவன் உண்டெனவும், அரும்பொருள் நிறைந்த ஒரு நூலைக் கண்டால் அந்நூலை ஆக்கிய ஒரு புலவன் உண்டெனவும், அழகிதாய் நெய்த ஒரு பட்டாடையைக் கண்டால் அதனை நெய்தோன் ஒருவன் உண்டெனவும், சுவை பட ஆக்கிய ஓர் உணவுப் பொருளைக் கண்டால் அதனை அவ்வாறு சமைத்த அடுதற்றொழிலாளன் ஒருவன் உண்டெனவும் நாம் தெளிதல் போல உருவவமைப்பிற் காணப்படும் எல்லாப் பொருள் கட்கும் அவ்வமைப்பினைத் தந்தோன் ஒருவன் உண்டென் றல் தேற்றமேயாம். இவ்வுலகமும் இவ்வுலகத்துப் பல் பொருள்களும் தாந்தாம் ஏற்றற்குரிய உருவங்களைப் பெறு தற்கு முன் ஏதோர் உருவுமின்றிக் கலைந்த நிலையிலிருந்தன. இவை அனைத்தும் அறிவில்லாப் பொருள்களாதலால் தாந் தாமே தத்தமக்குரிய உருவங்களைப் படைத்துக் கொள்ள மாட்டா. அறிவோடு கூடி நிற்கும் உயிர் ஒன்றனை ஓர் ஒழுங்குபெறச் செய்யக் காண்கின்றோமே யல்லாமல், அறிவிழந்து அயர்ந்துறங்கும் உயிர் ஒன்றனைச் செய்யக் கண்டதுண்டோ? அற்றேல், அறிவில்லா நீராவியும் மின்னும் மக்களால் இயற்றலாகா அரும்பெருந் தொழில்களெல்லாம் புரியக் காண்டுமேயெனின்; அறியாது வினாவினாய், நீராவி யினையும் மின்னினையும் பிறப்பிக்கும் இடம் அறிந்து பிறப்பித்து, அவற்றைக் குழல்களின் வாயிலாகவும் கம்பி களின் வாயிலாகவும் செலுத்தும் செலுத்தும் வகை வகை யறிந்து வாய்ப்பாகச் செலுத்தித் தொழிற்படுத்தும் அறிவுடையோர் ஏவலின் வழி நின்றே அவையும் அங்ஙனம் இயங்குதலும் இயக்குதலும் வல்லனவாய்ப் போதரக் காண்டலின் ஆண்டும் அறிவின் சேர்கையுளதாதல் தேற்றமேயாம் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/189&oldid=1591521" இலிருந்து மீள்விக்கப்பட்டது