உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

165

இவ்வுலகங்களும் இவ்வுலகத்துப் பல்பொருள்களுந் தோன்றுதற்கு இடமாய் உள்ள முதற்பொருள் மாயை யென்று சொல்லப்படும். மா என்னுஞ்சொல் உலகத்திலுள்ள எல்லா மொழிகளிலும் பெற்றதாயை உணர்த்துதலின், அறிவில் பொருள்கள் எல்லாம் பிறத்தற்கு இடமான முதற்பொருள் மாயை என்று சொல்லப்படுவதாயிற்று. மாயை எனினும் தாயகம் எனினும் ஒக்கும். மாயை என்பதற்குப் பொய்ப்பொருள் எனவும் வெறுந்தோற்றமா யுள்ளதெனவும் பொருள் கூறு வாரும் உளர்; இப்பொருள் கள் பிற்காலத்து நூல்களிலன்றிப் பண்டைஉபநிடதங்களிற் காணப்படாமையாலும், இவ்வுலகங்கள் தோன்றுதற்கு உண்மைப் பிறப்பிடமான பிரகிருதியே மாயை யென்று சுவேதாசுவதரோபநிடதத்து வழங்கக் காண்டலானும் இதற்கு இல்லாத வெறும் பொய்யென்று பொருளுரைத்தல் ஒருவாற்றானும் ஒவ்வாதென்க. அற்றேல், இதற்குப் பொய் என்னும் பொருள்தான் யாங்ஙனம் போந்ததெனின்; மாயையிற் பிறந்த இவ்வுலகத்துப் பொருள்கள் அடுத்தடுத்து நிலைமாறி மறைந்து போதலானும், மறைந்து போகும் அவற்றின்றன்மை பொதுவாக எல்லாரானும் அறிய வரா மையானும் மக்கள் தமதறியாமையான் அவை மறையுந் தன்மை பற்றி அவற்றைப் பொய்யென்று வழங்கத் தலைப் பட்டார். மற்று நுண்ணறிவு யுடையோரோ மறைத்துந் தோன்றியும் மாறிமாறி வரும் எல்லாப் பொருள்களும் இருவகை நிலையினும் உள் பொருளாகவே இருப்பதல் லாமல் இல்லாத வெறும் பொய்ப் பாருள்களாதல் எஞ்ஞான்றும் இல்லையென உறுதி கட்டியிருக்கின்றா ராகலின் மாயை என்னும் மொழிக்குப் பொய்ப்பொரு ளென்று பொருள்படுத்தல் உண்மையில் ஒரு சிறிதும் இயையாது.

உள்பொருளாகிய மாயை இவ்வுலகங்களும் பொருள் களுந் தன் கட் பிறப்பதற்கு முன் வடிவில்லா அருவ நிலையில் வெறு வறு வெளியாயிருக்க, இது தானே தன்னினின்றும் இவற்றைத் தோற்றுவித்துக் கொள்ளும் அறிவும் ஆற்றலும் இல்லாததாய்க் கிடக்க, எல்லா அறிவும் எல்லா ஆற்றலும் உடைய இறைவன் இதனிலிருந்து இவ்வுலகங்களையும் பொருள்களையும் ஓர் ழுங்குபெறத் திரட்டித் தோற்றுவித்து இவற்றை இயக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/190&oldid=1591522" இலிருந்து மீள்விக்கப்பட்டது