உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

மறைமலையம் - 28

வருவானாயினன். கடன் மணல் போற் பலவான ன் உலகங் களையும் அவ்வுலகத்துப் பொருள்களையும் உருவு கொளப் படைக்கும் பேரறிவுப் பொருளான றைவன் ஒருவன் இல்லையாயின் இறும்பூது பயக்கும் இத்துணை உலகங்களும் பொருள்களும் உடம்புகளும் தாமாகவே தோன்றமாட்டா. உருவுகொண்டு தோன்றிய இப் பொருள் களைக் காணும் முகத்தாலன்றோ, இவ்வுருவங்களை வகுத்த முதல்வனது பேரறிவுச் செயலை விளங்கக் காண்கின்றோம். இவையில்லை யாயின் இறை றைவனை யறிதல் செல்லுமோ! ஆதலாற், பொருள்கள் உருவுகொள்ளாத நிலையில் ஏதொரு பயனும் உடையவாகா; அவை உருவு கொண்ட நிலையிற் பயன்பெரிது உடையவாதலோடு கடவுளியல்பினையும் புலப்படக் காட்டா நிற்கும். ஆகவே, பொருள்கள் உருப்பெற்று நிற்குநிலையே பெரிதும் நலம் பயப்பதாய்ப் பாராட்டப்படு வதாதலும், அது தன்னோடு உடனாய் நிற்கும் அறிவின் மாட்சியை நன்கு அறிவுறுத்தலும் மறுக்கப்படாத உண்மைகளாம்.

இனி, னி, ஓர் அறிவில் பொருளினிடத்து ஓர் உருவந் தோன்றுங்கால், அவ்வுருவினை அதன்கட் டோற்றுவிக்கும் அறிவினிடத்தும் அதனோடொத்ததோர் உருவம் தோன்றா நிற்கும். ஒரு பொற்கட்டியில் அழகிய ஒரு பெண்மகளின் வடிவத்தைச் செதுக்கி இழைக்கப்புகும் பொற்கொல்லன் ஒருவன் அதனைச் செய்யும்முன் அவ்வடிவினைத் தனது அறிவின்கட்டோற்றுவித்துக் கொள்வான்; அவ்வாறு தன் அறிவின்கட் டெளிவாய் அமைத்துக் கொண்ட அழகிய உருவத் தினுக்குப் பொருந்தவே அப்பொற்கட்டியினும் அதனைப் பிறப்பிக்க வல்லனாவன். இங்ஙனம் புறத்தே ஒரு பொருளில் ஒரு வடிவத்தைத் தோற்றுவித்தற்கு முன்னெல் லாம் அகத்தே அதனோடொப்பதாகிய உருவத்தினை அறிவின்கண் அமைத்துக் கோடல் இன்றியமையாததாய் நிகழ்கின்றது. இவ்வாறன்றி வேறொருவாற்றல் எவரும் எதனையும் செய்தல் ஏலாது. எதனைச் செய்வதாயிருந் தாலும் அதனை முற்படத் தமதறிவின்கண் ஆராய்ந்த மைத்துக் கொள்வதனாலேயே உலகியல் நடைபெறுகின்ற தென்று ஓர்ந்துணர்க. எனவே, புறத்தேயுள்ள பொருள்களிற் றோன்றும் வடிவங்களுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/191&oldid=1591523" இலிருந்து மீள்விக்கப்பட்டது