உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

203

செருக்கிமயங்கும் புல்லறிவினார் சிலர் வடசொன் முதலான ஓரோவொரு மொழிக்கண் மட்டுமே மந்திரங்கள்

உளவெனவும், அவை தம்மைப் பயிலும் ஒரு பகுதியார் மட்டுமே வீடுபேய்துவரெனவுந் தருக்கிமொழிவர்; அவர் கூற்று இறைவன தருட்டன்மையை யுள்ளவாறுணராது குழறும் பொய்க் கூற்றாதல் மெய்யறிவு டையார்க்கெல்லாம் இனிது விளங்கு மாதலின், அது கொள்ளற் பாலதன்றென விடுக்க.

இனி, மந்திராத்துவாவான ஒவ்வொரு சொற்றொடரும் பல பதங்களால் ஆக்கப்படுதலின், அம்மந்திரங்கட் கெல்லாங் காரணம் பதங்கள் அல்லது சொற்களேயா மென்பது தானே போதரும், இவ்வாறு சொற்றொடர்களை ஆக்குஞ் சொற்களின் தொகுதியே பதாத்துவா எனப் பெயர் பெற்றது. 'ஓம் சிவமே போற்றி' என மேற் காட்டிய மந்திரத்தில் 'ஓம்' 'சிவம்' 'ஏ 'போற்றி' என்னும் நான்கு சொற்களும் பதங்களாம். இங்ஙனம் ஒவ்வொரு மொழிக் கண்ணுமுள்ள சொற்கள் எண்ணிறந்தன வாமென்க.

இனி, ஒவ்வொரு பதமும் ஒன்றல்லது பல எழுத்துக் களால் ஆக்கப்படுதலின் இவ்வெழுத்துகளே வர்ணாத்துவா எனப்பட்டன. வர்ணம் என்னும் வடசொல் எழுத்து என்னும் பொருட்டு மேற்குறிப்பிட்ட மந்திரத்தில் ஓ முதலாகிய எட்டெழுத்துக்கள் இருத்தல் காண்க.

L

L

இம் மந்திரம் பதம் வர்ணம் முதலிய மூன்றும் எழுத் தோசைகளேயாதலின், இவை வைகிரி, மத்திமை, பைசந்தி, சூக்குமை என்னும் நால்வகை வாக்குகளுள் அடங்குவன வாம். இவற்றுள், வைகரிவாக்காவது தன் நின்று பேசுவான் செவிக்கும் முன்நின்று கேட்பான் செவிக்கும் நன்கு புலனாவதாய்ப், பேசுவான் நினைந்த பொருளைக் கேட்பானுக்கு அறிவுறுத்துப் புறத்தே விளங்கித் தோன்றுவது. மத்திமை வாக்காவது புறத்துள்ளார் செவிக்குப் புலனாகாத மெல்லோசையாய், ஒருவனது மிடற்றின்கண் மட்டுமே நிகழ்ந்து, அவற்குப் பல்வேறு ணர்வுகளைப் பயக்கும் நீரது. பைசந்திவாக்காவது, இனிப் பிறப்பதாகிய மயிலின் தோகையிற் காணப்படும் ஐவகை நிறங்களும் அதன் முட்டைக்குள் நீரில் நுண்ணிய வடிவில் அடங்கி நிற்றல்போல, மிடற்றின்கண் வேறு வேறு பிரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/228&oldid=1591562" இலிருந்து மீள்விக்கப்பட்டது