உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

மறைமலையம் - 28

முதனிலைக்கு ‘நினைத்தல்’ என்பதே பொருளாகலின், மந்திரம் என்பது நினைத்தற் கருவியாகிய சொற்றொடர்க் குப் பெயரா யிற்று. அற்றேல், நம்மனோர் நினைவுகளைத் தோற்றுவிக்குஞ் சொற்றொடர்களெல்லாம் மந்திரம்

எனப்

பயர்

பெறாமையும், இறைவனையும் இறைவனது வழி பாட்டையும் நினைவி லெழுப்புஞ் சொற்றொடர்களே அப்பெயர் பறுதலும் என்னையெனின்; இறைவனல்லாத ஏனைப் பொருள்களும் உயிர்களும் மக்களுக்குயிர்க் குறுதி தருவன அல்லாமையால், அவற்றை நினைவின்கண் எழுப் புஞ் சொற்றொடர்களும் அப்பெரும்பயன் றராவாய் வறிதாவனவே யாம்; மற்று எல்லாம்வல்ல முதல்வனொரு வனே உயிர்களில் எறிய மலக் கறை கழூஉவி அவை தமக்குத் தனது திருவடிப் பேரின்பத்தை நல்கவல்லனாகலின் அவனையும் அவன்றன் விழுமிய தன்மைகளையும் ஓவாது நினைவிற் றோற்றுவிக்குஞ் சாற்றொடர்கள் மட்டுமே அவ்வாறு ‘மந்திரங்கள்' எனச் சிறந்தெடுத்து ஆன்றோரான் வைக்கப்பட்டன. இவ்வாறு ‘மந்திரங்கள்’ வீடுபேற்றிற்கு ஒருவழியவாதல் பெறப்பட்டமை யின் அவை ஓர் அத்து வாவாதல் வாய்வதேயாம் என்க. 'ஓம் சிவனே போற்றி' என்றற் றொடக்கத்துச் சொற்றொடர்க ளெல்லாம் மந்திரங் களாதல் கடைப்பிடித் தறிந்து கொள்க. இன்னோரன்ன சொற் றொடர்களில் நினைவை இருத்தி அவற்றை இடைவிடாது பயிலப்பயில, அங்ஙனம் பயில்வார் இறைவன் றிருவருட் பேற்றிற்குரியராதல் திண்ண மென்க. இறை வனையும், அவன்றன் அரும்பெருந் தன்மைகளையும் நினை விற் றோற்றுவிக்குஞ் சொற்றொடர்கள் எம்மொழியில் உள வேனும், அவை தம்மைப் பயில்வாரைப் புனிதராக்கி இறைவன் றிருவடிக்கண் உய்த்தல் ஒருதலையாகலின் வை மொழிக்கே, அன்றி ஒருசார் மக்களுக்கே உரியவென்று கொள்ளற்க. எல்லா மொழிகளுள்ளும், எல்லா நாட்டினுள் ளும், எல்லா மக்களுள்ளும் இறைவன்றிருவருளைப் பெற்ற அடியார் உளராகலின், எம்மொழியிலும் எந்நாட்டிலும், எம் மக்களிலும் வீடு பேற்றினை எய்துதற்குரிய வழியும் அதன்கட் செல்வாரும் உண்மை திண்ணமாமென்க. கடவுள் எங்கும் உளனாய் எல்லார்க்கும் அருடருபவனாயிருத்தலை யுணராது, தமது சிற்றறிவையே பேரறிவாகத் திரிபுறக் கொண்டு

ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/227&oldid=1591561" இலிருந்து மீள்விக்கப்பட்டது