உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201

11. அத்துவாக்கள்

இனி, மந்திரம் பதம் வர்ணம் தத்துவம் புவனம் கலை என்னும் ஆறத்துவாக்களுள் வைத்து இம் முப்பத்தாறு தத்துவங்களையும் வகுத்தடக்கிக் காட்டுபவாகலின், அதுவும் ஒரு சிறிது விளக்கிக் காட்டுவாம். உலகுதான் ஓசை வடிவிற்றாய் நிற்பதூஉம், பொருள் வடிவிற்றாய் நிற்பதூஉமென இருபகுதித் தாம். மந்திரம், பதம், வர்ணம் என்னும் மூன்றத்துவாக்களும் ஓசையுலகினும், தத்துவம், புவனம், கலை என்னும் ஏனை மூன்றத்துவாக்களும் பொருளுலகினும் அடங்கும்.

னி, அத்துவா என்பது ‘அத்வந்' என்னும் உட சொற்றிரி பாகும்; அத்துவா எனினும் வழி எனினும் ஒக்கும். மந்திரம் பதம் முதலிய ஆறும் வழியெனப் பெயர் பெற்றவா றென்னை யெனின்; ஓசைவடிவும் பொருள்வடிவுமாய் நிற்கும் இவை யாறும் உயிர்களுக்குச் சிறிய பெரிய கருவிகளாய் உடன் நின்று அவை தூயவாதற்கு உதவுதலோடு, தூயவாம் அவ்வுயிர் கள் அவற்றின் வழியே மேன்மேற் சென்று இறைவன் றிருவடியைத் தலைக் கூடுதற்கும் இடந்தந்து நிற்றலின் அவை அவ்வாறு 'வழி' எனப் பெயர் பெறலாயின. இவையாறும் சிறுவடிவினவாய் ஒன்று அளாய் நிற்குங்காற் 'பிண்டம்’ எனவும், மற்றுப் பெரு வடிவினவாய் விரிந்து நிற்கும்வழி, 'அண்டம்' எனவும் வழங்கப்படும். புன்முதன் மக்கள் தேவர் ஈறான உயிர்களின் உடம்புகளே பிண்டமாம் எனவும், இந்நிலமண்டிலம் ஞாயிற்று மண்டிலம் முதலிய உலகங்களே அண்டமாம் எனவும் அறிதல் வேண்டும்.

6

இனி, ஓசைவடிவான மந்திரம், பதம், வர்ணம் என்னும் மூன்றத்துவாக்களுள் மந்திரம் என்பது மக்கட்கு நினைவினை எழுப்பும் ஒரு சொற்றொடர். வடமொழியில் ‘மந்' என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/226&oldid=1591560" இலிருந்து மீள்விக்கப்பட்டது