உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

மறைமலையம் 28 ய

ஓரறிவு முதலாகவுடைய உயிர்வகைகளுள்ளும் பல வேறு வகையான இனங்களும் அவற்றுக்கேற்ற

உடம்புளும் அவ்வுடம்புகளில் அமைந்த உறுப்புகளும் அவை வாயிலாகத் தோன்றும் அறிவு நிகழ்ச்சிகளும் ம் எண்ணிறந்த வேறு பாடுகளுடனும் ஏற்றக்குறைவு களுடனுங் காணப்படுதலும். எல்லைகாண்டலரிய இவ்வேறுபாடு களுக்கு இசையவே இவ்வுயிர்கடமக் கெல்லையற்ற இன்பத்துன்ப நுகர்ச்சி வேறுபாடுகள் உளவாதலும் என்னை யென்று வினாவுவார்க்கு அங்ஙனங் கொள்வார் இறுக்கலா காமையின். ஆணவம் ஒரு தன்மைப்பட உயிர்களை மறைக்கு மென்று அவ்வாறு கோடல் பொருந்தா தென்றொழிக. இங்ஙனமாக ஆணவமலம் பல்வகை உயிர்களைப் பல்வேறு வகையாகப் பற்றியிருத்தல் கண்கூடாகத் தெளியக் கிடத்த லின்; இதுகொண்டு, நம்மனோரினுங் குறைந்த ஆணவமலக் கட்டும் அதற்கேற்பக் குறைந்த இருவினைத் தாடர்புடைய பிரளயாகலரும், அவரினுஞ் சாலக் குறைந்த ஆணவப்பற்று உடைய விஞ்ஞானகலரும் அவரவர்க்கேற்ற மேன்மேலு லகங்களில் வைகி, இறைவன் திருவுளக்குறிப்பின் வழிநின்று ஐந்தொழில் நடாத்தி அவ்வாற்றான் முற்றுந்தூய ராய் இறைவன் திருவடியைத் தலைக்கூடுவரென்பதூஉந் தெளியப் படுமென்க. இவ்வாறு, சுத்தவித்தை ஈசுரம் சாதாக் கியம் சத்திசிவம் என்னுஞ் சுத்தமாயா தத்துவங்கள் ஐந்தின் இயல்பும், அவற்றிலிருப்பாரான உயிர்களின் தன்மையும் உணர்ந்து கொள்க.

இதுகாறும் விளக்கியவாற்றான் ஆன்ம தத்துவம் இருபத்துநான்கும், வித்தியா தத்துவம் ஏழும், சிவ தத்துவம் ஐந்தும் ஆக முப்பத்தாறு தத்துவங்களினியல்பும் தெளிந்து கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/225&oldid=1591559" இலிருந்து மீள்விக்கப்பட்டது