உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

199

பெற்றார்க்கு அவர்தந் தகவுக்கேற்ற ஒள்ளிய உடம்புங் கூர்த்த கருவிகளும் அழகிய மாளிகைகளும் இனிய நுகர் பொருள் ய களும் இறைவனருளால் வாய்த்தலும், அறிவுந் தூய்மையும் இல்லார்க்கு அவர் தகுத்திக்கொத்த உவர்ப்புடம்பும் மழுங்கிய கருவிகளும் அழுக்கிடங்களும் அருவருப்பான பொருள்களும் அல்லாது வேறுயர்ந்தன வாயாமையும் பகுத்துக் காண மாட்டுவார்க்கு, உயர்ந்தன வாகிய மேலுலகங்களிலும் இப்பெற்றிப்பட்ட வேறு பாடுகள் உண்மை மறுக்கப்படாதென்பது தெற்றென விளங்கும்.

இவ்வுலகத்தினும்

அற்றேலஃதாக, மும்மலக்கட்டுடைய சகலர் நம்ம னோரி னுந் தூயரான பிரளயாகலரும், இருமலக்கட்டுடைய பிரளயா கலரினுந் தூயரான விஞ்ஞான கலரும் உளரென்பது எற்றாற் பெறுதுமெனின், அறிவு நிகழ்ச்சியில் ஏற்றக் குறைபாடுடையன வாக நம்மனோர் கண்ணெதிரே காணப் படும் பல்வேறுயிர் களின் இருப்பே நமக்கு மேலும் அவ்வகை வேறுபாடுடைய ய உயிர்களுண்மையை நன்கு அறிவுறுத்தும். புன்முதலிய ஓரறிவுயிர் தொடங்கி மக்களென் னும் ஆறறிவுயிர் ஈறாக நேரே காணப்படும் பலதிறப்பட்ட உயிர்களும் அங்ஙனங் குறுகியும் விரிந்தும் நிகழா நின்ற பல்வேறுவகை அறிவு நிகழ்ச்சிகள் உடை யனவாய் ஒரே காலத்திற் காணப்படுதலை உற்றுநோக்க வல்லார்க்கு. அவற்றுட்பல அங்ஙனம் விரிந்த அறிவு நிகழ்ச்சி யுடையன வாய் மேன்மேற் பிறவிகளில் நிற்றற்கும் மற்றும்பல சுருங்கியஅறிவு நிகழ்ச்சியுடையனவாய்க் கீழ்க்கீழ்ப் பிறவி களில் நிற்றற்கும் அவை தம்மைப் பொதிந்த ஆணவம எல்லாவுயிர்களையும் ஒரேவாறாகப் பற்றாமற் பலவற்றைச் செறியப்பற்றியும் ஏனைப்பலவற்றை நெகிழப் பற்றியும் இயற்கையிலேயே பலபடியாக அவை தம்மை மறைத்திருத் தலே காரணமாமென்பது நன்கு புலனாம். அவ்வாறன்றி அஃது எல்லாவுயிர்களையும் ஒரு தன்மைப் படவே மறைத்து நிற்குமென்று கோடுமெனிற் பல்லுயிர்கள் ஓரறிவே யுடையன வாயும், ஏனைப்பல ஈரறிவே யுடையனவாயும் மற்றும் பல மூவறிவே யு யுடையனவாயும், பின்னும் பல நாலறிவே யுடையனவாயும், இன்னும் பல ஐந்தறிவே யுடையன வாயும் மேலும் பல ஆறறிவே யுடையனவாயும் இருத்தலும், இவ்வாறு

ணவமலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/224&oldid=1591558" இலிருந்து மீள்விக்கப்பட்டது