உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

  • மறைமலையம் - 28

யானென்பது. அற்றேல், அவர் நடாத்துந் தொழிற்கும் இன்ப நுகர்ச்சிக்கும் ஏதுவாவது என்னையெனின்; ஆண்டு அவர்பாற் செறிந்து நிற்குஞ் சிவபிரான் றிருவருளே அவரை அவ்வாறேவி அவற்றை அவர் மாட்டு விளைத்தற்கு முதலாய் நிற்கு மென்றோர்ந்து கொள்க. அதுவேயுமன்றி, மலமாசுதீர்ந்து இறைவன் ஏவல்வழி நின்று அவனருளிற் றோய்ந்திருப்பாரான அவர்க்குத் தூய அறிவு விளக்கம் உண்டாகலானும், இவ்வறிவு விளக்கத்தாற் செய்யுஞ் செயல்களும் நுகரும் இன்ப நுகர்ச்சிகளும் வினையின் வழியவாதல் செல்லாமை யானும் அவர்க்கு வினையன்றியே யாவும் நிகழுதல் தேற்றமாமென்க. அற்றாயினும், உடம்பும். உடம்பின் அகத்தும் புறத்துமுள்ள கருவிகளும், இவ்வுடம் போடுகூடி இயங்கும் நிலமும், அதன்கண் உள்ள நுகர் பொருள்களும் வாய்ப்பினன்றித் தொழில் நிகழ்ச்சியும் இன்ப நுகர்ச்சியும் உளவாதல் ஏலாமையின், மாயையின் தொடர் பில்லாத விஞ்ஞான கலர்க்கு அவையிரண்டும் உளவென்றல் யாங்ஙனம் பொருந்துமெனின்; நன்று வினாயினாய், அசுத்த மாயை பிரகிருதிமாயையிற் கிடப்பபாரான நம்மனோர்க்குப் போலத் தூயவல்லா உடம்புங் கருவிகளும் நிலமும் நுகர் பொருளும் விஞ்ஞான கலர்க்கில்லை யென்றதே யன்றிச் சாலவுந் தூயவாய உடம்புங் கருவிகளும் நிலமும் நுகர் பொருள்களும் அவர்க்கில்லையென்று ஆகமங்கள் கூறாமை யாலும், பெரிதுந் தூயவாய அவை சுத்த மாயையின் கண்ணே உளவாய் எல்லையற்ற கழிபேரின்பத் தினை அவர்க்குப் பயக்கு நீரவாய்த துலங்குமெனவே அவ்வறிவு நூல்கள் யாப்புறுத் தோது தலானும் தூய்தல்லா மாயையின் பயிற்சியே பற்றி அங்ஙனம் வினாவுதல் பொருந்தாதென் றொழிக. ஆணவ மலக்கட்டுச் சாலப் பெரிதுடையரானமை பற்றி நம்மனோ ரெல்லாம் அந்நிலைக் கேற்ப அசுத்த மாயையின்கண் இருத்தப்பட்டு அதன்கட் டிரட்டப்பட்ட உடம்புங் கருவிகளும் நிலமும் நுகர் பொருள்களும் பெற்றாற்போலவே, அதன்கட்டு நீங்கித் தூயரான விஞ்ஞான கலரும் தந்நிலைக்கேற்பச் சுத்த மாயையின்கண் இறைவனரு ளால் நிலனும் நுகர்பொருள்களும் பெறலாயினாரென்க. வாலாமாயையில் வாழ்குநரான நம்மனோர்க்குள்ளும் அறிவினேற்றமும் அகம்புறந்தூய்மையும் உடையராகப்

ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/223&oldid=1591557" இலிருந்து மீள்விக்கப்பட்டது