உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

197

மாயையின் நடுவண் வைகுவாரான சீகண்டருத்திரரும், பிரகிருதியிற் குண தத்துவத்தி லிருப்பாரான உருத்திரரும் அல்லரென்பது கடைப்பிடிக்க. உருத்திரன் என்னும் பெயரொப்புமையே பற்றிச் சுத்தவித்தையினும் பிருகிருதியினும் அப்பெயரோடு வைகும் பிரளயாகல சகலருத்திரரும் முழுமுதற் கடவுளும் ஒருவரேயாதல் செல்லாமை இதனாற்றெற்றென விளங்கா நிற்கும்.

ஈசுரம் சாதாக்கியம் என்னும் மேலிருதத்துவங்களும் ஒன்றினொன்று நுண்ணியதாயிருத்தலிற் சூக்கும தத்துவங்க ளென்றும், இச் சுத்தவித்தை அவ்விரண்டனையும் நோக்கப் பருவடிவிற்றாமாகலின் இதனைத் தூலதத்துவமென்றும், இவ்வாற்றால் இவற்றுக்கேற்ப இவற்றின் கண் இருப்பாரான உயிர்களும், னையிரண்டினும் வைகுஞ் சதாசிவர் மகேசுரரைக் காட்டினும் அதிகார மலப்பற்று மிகுதியுமுடை ரென்றும் உணர்ந்துகொள்க. இவற்றுண் மேன்மேற் றத்துவங் களிலுள்ளோர் தமது அதிகாரமலப்பற்றும் விட்டு விட் வீடுபேறெய்திய வளவானே, கீழ்க்கீழ்த் கீழ்க்கீழ்த் தத்துவங்களி லுள்ளோரும் மேன் மேலுயர்த்தப்பட்டு, அம்மேற்றத் துவங்களி லிருந்தவாறே முற்றுந் தூயராய்ச் சிவபிரான் திருவடியைத் தலைக்கூடி வீடுபேறெய்துவரென அறிவு நூல்கள் கூறுகின் றன. சாதாக்கியம், ஈசுரம், சுத்தவித்தை என்னும் இம்மூன்று சுத்த மாயா தத்துவங்களினும் இருப்பாரான சதாசிவர் மகேசுரர் மகா மந்திரர் உருத்திரரென்னும் இவர்க்கெல்லாம் ஆணவமலத் தொடர்பு சிறுதுளதேயன்றி, ஏனை அசுத்த மாயை பிரகிருதி மாயையில் இருப்பாரான பிரளயாகலர் சகலர்க்குப்போலக் கன்மம் மாயை என்னும் வேறிரண்டன் றொடர்பில்லாமையால் அவர் வினை வழியின்றியே தமக் குரிய தொழில்களை நடாத்திக் கொண்டு இன்ப நுகர்ந்திருப்பர். தந்தொழில் நடாத்துதலும் இன்ப நுகர்தலும் வினையால் உளவான வாகலின் ஆண்ட வர்க்கு வினையின்றியே அவை நிகழு மென்றல் யாங்ஙனம் பொருந்து மெனின்; அற்றன்று, ஆணவமலப்பற்றுப் பெரும் பாலும் நீங்கித் தூயராய் நிற்கும் அவர்க்கு, அப்பற்றின் மிகுதி யால் உளவாம் இருவினைகளும், அவற்றின் பயன்நுகர்ச்சி களும் உண்டென்றல் ஏலாமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/222&oldid=1591556" இலிருந்து மீள்விக்கப்பட்டது