உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

மறைமலையம் - 28

அதன்கண் உவர்ப்புடையராயதும் அவனருளாற் சாதாக்கிய தத்துவத்தின் கண் மேலுயர்த்தப்பட்டு ஆண்டிருந்தவாறே இறைவனடியைத் தலைக் கூடிவீடுபே றெய்துவரென்க. இவ்வீசுவர தத்துவமும், இதற்கு மேலுள்ள ஏனைமூன்று தத்துவங்களும் நுண்ணிய இயல்புடையன வாய், மேன்மேற் செல்லச் செல்ல ஒன்றி னொன்று ஏற்ற மான நுண்மை யுடை யன வாய் இருப்பனவாகும். இத் தத்துவங்களில் வைகும் உயிர்களும் அவ்வவற்றிற்கேற்றபடி முதலிரண்டில் மலக்கட்டு முற்றும் நீங்கி வீடுபெற்ற தூய உயிர்களாயும், மூன்றாவதிற் சிறிதுள்ள மலத்தடையும் நீங்குந்தரத்தில் உள்ளாராயும், நான்காவதில் அதிகார மலப்பற்று ஒன்றேயுடையராயும், அளவு படாத ஒளியும் அறிவும் வாய்ந்தாராயும், தாந்தாம் விரும்பிய இன்பங்களை வியக்கற் பாலதாம் எல்லையற்ற அழகொளி வீசுங் கடவுண் மாதரரோடு நுகரும் நுகர்ச்சிப் பேற்றினைச் சிவபிரான் றிருவருளாற் பெற்றாராயும் வைகுவரெனப் பௌட்கராக மங் கூறாநிற்கும். எனவே, இத் தத்துவங்கள் நான்கும், இவற்றின்கண் வைகும் உயிர்களும் மிகநுண்ணிய சூக்கும நிலையினவென்பது உணரற்பாற்று.

என்னும்

இனி, மேற்கூறிய ஈசுரம் சாதாக்கியம் இருதத்துவங்களினும் வைகும் மகேசுரர் சதாசிவர் என்னும் விஞ்ஞான கலர் மலமறைப்புப் பெரிதுமில்லாதவராகையால் அவர் பொருட்டு அத்தத்துவங்களைத் தோற்றுவிப்பான் வேண்டிச் சத்தியினை ஏவித் தொழில் செய்வித்த முதல்வன், அவரினும் அறிவிற் சிறிது குறைந்தாராயுள்ள மகாமந்திரர் கள் உருத்திரர்களென்னும் இவர்க்கு அறிவினைப் பெரிதும் விளங்கச் செய்தற்பொருட்டச் சிவமாகிய தன்னறிவினை மேற்படக் காட்டித் தன் சத்தியின் றொழிலைக் குறைத்து நின்றநிலையில் உருத்திரன் எனப் பெயர் கூறப்படுவன் என்க. இவற்கேற்ப இவனோடொத்து நிற்குஞ் சுத்தமாயா தத்துவமுஞ் சுத்தவித்தை எனப் பெயர் பெறா நிற்கும். ஈண்டு உருத்திரன் என்று ஓதப்பட்டோன் மாசங் காரத்தைச் செய்யும் முழுமுதற் கடவுளாகிய சிவ பிரானே யல்லது, இச் சுத்தவித்தியா தத்துவத்தின்கண் அவனால் நிறுத்தப்பட்ட அதிகார மலப்பற்றுடைய ய உருத்திரரும், இதன்கீழுள்ள அசுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/221&oldid=1591555" இலிருந்து மீள்விக்கப்பட்டது