உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

195

பின்னர்ச், சத்தியின் றொழில் உலகங்களைத் தோற்று வித்தற் கண் மேன்மேன் மிக்குச்சென்று, தொழிலின்றி வைகுஞ் சிவத்தி னுங் கிளர்ச்சியுற்று நிற்றலின், இங்ஙனந் தொழிலின் முறுகி நிற்குஞ் சத்தியோடு இரண்டறக்கலந்து தோன்றுஞ் சிவமும் இந் நிலையில் ஈசுவரன் எனப் பெயர்பெற்று நிற்பன் என்ப. ஈசுவரன் எனினும் தலைவன் எனினும் ஒக்கும். இங்ஙனம் நிற்குந் தலைவற் கேற்பச் சுத்த மாயையில் இவராற் கலக்குண்ட பகுதியும் இவற்கு ஒத்துத் தோன்றுமாகலின், அங்ஙனந் தோன்றுஞ் சுத்த மாயாதத்துவமும் ஈசுவர தத்துவமெனப் பெயர் பெறுமென்று ரைப்ப. இவ்வீசுவர தத்துவத்திற் றலைவன் எனப் பெயர்பெற்று நிற்கும் இறைவற்கும்,. இதற்குமேற் சத்திசிவம் என்னுந் தத்துவங்களில் நிற்கும் இறைவற்கும் எவ்வாற்றானும் வேற்றுமை இல்லையென்று ஓர்க. கீழுள்ள எல்லாத் தத்துவங்களையும் ஒடுக்கிக்கொண்டு சத்திசிவதத்துவங்களில் நிற்கும் முதல்வன் அவ்வாற்றால் ஒடுக்கச் சிவன் எனவும், அறிவுந்தொழிலும் ஒக்கநின்று சுத்த மாயையைக் கலக்கி அதன்கண் அந்நிலைக்கு ஏற்ற சாதாக்கிய தத்துவத்தைப் பிறப்பித்து மேலும் பல தத்துவங்கள் அதன்கட் பிறக்குமாறு அதனை ஏவுநிலையில் அதன்கண் நிற்கும் முதல்வன் ஏவற்சிவன் எனவும் பெயர் பெற்றாற்போல், இவ்வீசவரத்தத்துவத்தில் அவ்வேவுதற் றொழிற்குத் தலைவனாய் அதனை மேன்மேல் நடை பெறுத்து நிலையில் நிற்கும் முதல்வனும் தலைமைச் சிவன் எனப் பெயர்பெற்று நிற்பனென்க. ஒடுக்கச் சிவனை 'இலயசிவன்' ‘சத்தன்’ ‘நிட்களன்' எனவும், ஏவற்சிவனைப் 'போகசிவன்' உத்தி யுத்தன் சகளநிட்கௗன்’ சதாசிவன்' எனவும், தலைமைச் வினை ‘அதிகாரசிவன்’ “பிரவிருத்தன்’ ‘சகளன்’ ஈசுவரன்' எனவும் வடமொழிக்கண் ஆகமநூலார் பெயர் வழங்குவர். இவ்வீசுவரதத்துவத்திற் றலைவனாய் நிற்கும் றைவனால் இதன்கண் இருத்தப்படும் உயிர்களும் பலர் உளர். இயற்கையே மலவலி குறைந்த விஞ்ஞான கலரில் தலைமை நடாத்தும் விருப்பம் மீதூரப்பெற்ற மலப்பற்று மட்டுமுடை யோர் இதன்கண் இறைவனருளால் இருப்ப ரெனவும், அவர் அநந்ததேவர் முதல் எண்மராவரெனவும் அறிவு நூல்கள் பகராநிற்கும். இவரெல்லாம் முதல்வனாகிய சிவபிரான் ஏவல்வழி நின்று தாமுந் தலைமை நடாத்திப், பின்னர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/220&oldid=1591554" இலிருந்து மீள்விக்கப்பட்டது