உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

மறைமலையம் 28

படுத் தோதப்படுவ தாயிற்று. இவ்விரு தத்துவங் களும் நேரே சத்தி சிவங்கட் கிருப்பிடமாகப் பெறப்படுதலின் இவற்றின் கட்சென்று வைகுவன மலம் நீங்கி வீடுபெற்ற உயிர்களே யாம்; ஏனை னை ஆணவ மலத்துடக்குச் சிறிதுடைய சதாசிவர் மகேசுரர் முதலாயினோரும் இவ்விரு தத்துவங் களினும் வைகுதற்குரிமை இலராகலின், அவரெல்லாம் இவ்விரண் டின் கீழ்நின்ற தத்துவங்களின் பாலராய் வைகுவ ரென்று தெரிந்துணர்ந்து கொள்க.

இனிச் சத்தியின் தொழில் எத்துணைநிகழும் அத் துணைக்கும் ஒத்த அறிவோடு சிவம் அதனோ டியைந்து நிற்குமாயின் அந்நிலையில் அது சதாசிவம் எனப்படுவ தாகும். இங்ஙனம் இறைவன் சதாசிவமாய் நிற்கு நிலைக் கேற்ப, அவனோ டியைந்து நிற்குஞ் சத்திசிவ தத்துவங்களுந் தம்முள் ஒத்து நிற்குமாகலின் அவை யிரண்டன் இயைபும் அந்நிலையிற் சாதாக்கிய தத்ததுவ மெனப் பெயர் பெறாநிற்கும். இச் சாதாக்கிய தத்துவத்தில் இயற்கையே ஆணவமலக்கட்டு ஒன்று மட்டும் உடையரான சதாசிவர் இருப்பர். விஞ்ஞான கலரில் மிக உயர்ந்தோராம் உயிர்கள் சதாசிவராவரென்றுணர்க. சாதாக்கிய தத்துவத் திற் சதாசிவரெனப் பெயர் பெற்று நிற்கும் இறைவற்கும் முழுமுதற் கடவுட்கும் ஒருவாற்றானும் வேற்றுமை

இல்லை. ஆனால் ஆண்டு ஒருமலக்கட்டுடையராய்ச்

சதாசிவரென அப்பெயரே பெற்று வைகும் விஞ்ஞான கலர்க்கும் இயற்கையே தூயராய் நிற்கும் இறைவற்கும் வேற்றுமை பெரிதாகலிற், சதாசிவ ரெனும் பெயரொப்புமையே பற்றி அவ்விருவரும் ஒருவரே போலுமென மயங்கற்க. வி ஞ்ஞா ஞான கலரில் மலங்கழலும் பதத்திற் றக்கோரா யுள்ளார்க்கு முதல்வன் அருள்புரிந்து அவரைச் சாதாக்கிய தத்துவத்திலிருந்து ஆட்சிசெலுத்து மாறு இருத்துவன். அவ்வாறங் கிருந்து ஆட்சிநடாத்துஞ் சதாசிவர் அதன்கண்ணும் விருப்பிலராய் அதனை உவர்த்து விட்டபின் பின் இறைவன் திருவடியைத் தலைக்கூடி வீடு பேறெய்துவ ரென்க.

இனி, இவ்வாறு சத்தியை ஏவி அதனாற் சுத்த மாயையைக் கலக்கி, அறிவுந்தொழிலும் ஒத்துநின்ற சத்திசிவங்களாகிய தமது நிலைக்கு ஏற்பத் தோற்றுவித்த சாதாக்கிய தத்துவத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/219&oldid=1591553" இலிருந்து மீள்விக்கப்பட்டது