உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

66

193

இனி, ஆணும் பெண்ணுமாய் ஒருங்கு விராய் நிற்கும் அம்மையப்பர் உலகங்களைத் தோற்றுவிப்பான் வேண்டி, துண்மையிலுந் தூய்மையிலுந் தம்மோடு ஒருபுடை யொத்து நிற்குஞ் சுத்த மாயையிற் றோய்ந்து அதனை இயக்கியவழி அஃது இருபாற்றாய் விந்துநாதம் எனப் பெயர் பெற்றியங்கு தலை மேலே விளக்கிப்போந்தாம். இவ்விந்து நாதங்கள் சத்தி சிவங்களோடு நனிவிரவி நின்று அவர்தம் ஆற்றல்களைத் தங்கீழுள்ள தத்துவங்களில் உய்த்தலின், இவையுஞ் சத்திசிவம் எனப்பெயர் பெறாநிற்கும். இவ்வா றிடத்தின்நின்ற பொருட் பெயர் அவ்விடத்திற்கானது ஓர் ஆகுபெயர். அற்றேற் சத்தி சிவ தத்துவங்கட்கும் அவற்றுள் விரவி நிற்குஞ் சத்தி சிவங்கட்குத் தம்முள் வேற்றுமை யெனின்; சத்திசிவங்கள் அறிவுடைய சித்துப் பொருள்கள் என்றும், சத்திசிவ தத்துவங்கள் அறிவில்லாச் சடப்பொருள்கள் என்றும் பகுத்துணர்ந்து கொள்க; இது ஞானமேயானபோது சிவன்” எனவும், “சத்திதன் வடிவே தென்னிற் றடையிலா ஞான மாகும்” எனவும் போந்த திருமொழிகளானும் உணரப்படும். அஃதங்ஙனமாகுக, சத்திசிவங்களிரண்டுமே ஞானவுருவாயின் அவ்விரண்டனையும் வேறு வேறு பெயரான் வழங்குதல் என்னை? ஒரு பெயரே u யமையாதோவெனின்; அற்றன்று, சிவம் எஞ்ஞான்றும் அறிவுருவாயே நிற்பதல்லது ஒரு தொழிலை யுடைத்தாவதன்று; சத்தியோ அறிவாய் நிற்றலோடு தொழிலும் உடைத்தாவது. இறைவன் சுத்தமாயையை இயக்கு மிடத்துந் தன் சத்தியின் வாயிலாகவே அதனைச் செய்வானல்லது தானாகவே அதனைச் செய்வான் அல்லன்; இது தெரித்தற்கே “முன்னருட் சத்தி தன்பால் முகிழ்க்குந் தான் முளையானன்றே” என்பதூஉம் எழுந்தது. எல்லாத் தத்துவங்களும் ஒடுங்கி நிற்றற்கிடமாகிய விந்துமாயையில் இறைவனும் அறிவு மாத்திரையனாய் ஒடுங்கி நிற்றலின் ஆண்டவன் இலய சிவனெனப் பெயர் பெறுவ னென்று அறிவு நூல்கள் கூறா நிற்கும். விந்துமாயை ஒன்றே அறிவு மாத்திரையனாய சிவனுக்கிருப்பிடமாய் ஒடுங்கிநின்ற வழிச் சிவதத்துவமெனவும், அவன் கருத்துக் கிசைந்து தன்கட்டொழிலினைத் தோற்றி அவனோடு இரண்டறச் செறிந்துநிற்குஞ் சத்தியாற் கலக்குண்டு தானுந் தொழிலு டைத்தாகிய அதன் பாகம் சத்திதத்துவ மெனவும் இருவகைப்

து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/218&oldid=1591551" இலிருந்து மீள்விக்கப்பட்டது