உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

10. சுத்தமாயா தத்துவங்கள்

இங்ஙனமாகப் பண்பும் பண்பியும்போல் ஒருங்கு விராய் நிற்கும் அம்மையும் அப்பனும் சிவஞானபோதம் முதலான சைவசித்தாந்த நூல்களும் சத்தி சிவம் என்னும் பெயர்களால் வழங்கப்படுவர். உலகங்களைத் தோற்று விக்கும் ஆற்றல் முதன்முதல் அம்மையின் வாயிலாகவே புலப்படுதலின், அவ்வாற்றலைப் பிறப்பிக்கும் அவள் சத்தி எனப்பட்டாள். ஒரு தொழிலின் பெயர் அத்தொழிலை யுடைய பொருட்கும் பெயராய் வழங்குதல் ‘வற்றல் உண்டான்' 'இஃதோர் ஏறு' 'இஃதொரு குத்து' என்றற் றொடக்கத்து வழக்குகளிற் காணப்படுதலிற் 'சத்தி’ என்னுந் தொழிற் பெயர் அதனை யுடைய அம்மைக்கும் பெயராயிற்று. இதனை யுணராதார் ஆற்றல் ஒரு பொருட்குணமாகலிற் சத்தியும் சிவத்திற்கு ஒரு குணமாமென உரைந்தார். அங்ஙனமுரைப்பிற், குணத்திற் குங்குணத்தையுடைய பொருட்கும் எவ்வாற்றானும் வேற்றுமை யின்மையிற் “பொன் மைநீலாதி வன்னம் பொருந்திடப் பளிங்க வற்றின், றன்மையாய் நிற்கு மாபோற் சத்திதன் பேதமெல்லாம், நின்மலன் றனாத்தோன்றி நிலைமையொன் றாயே நிற்பன், முன்னருட் சத்தி தன்பால் முகிழ்க்குந்தான் முளையா னன்றே அரனுடையதாகிப், புத்திமுத்திகளை யெல்லாம் புரிந்தவன் நினைந்த வாறாம்” “வரும்வடி வெல்லாஞ் சத்தி சத்திதான் மரமுங் காழ்ப்பும், இருமையும் போல மன்னிச் சிவத்தினோ டியைந்து நிற்கும்" "சத்தியுஞ் சிவமுமாய தன்மை யொடக்கத்துத் திருமொழிகள் அவை யிரண்டனையும் இரண்டாகவே வைத்தோதுதல் பொருட் பேறிலவாய் ஒழியு மென்க. ஆதலாற், சத்தியுஞ் சிவமும் பொருளால் இரண்டாயுங் கலப்பால் ஒன்றாயு நிற்கு மென்பதே தேற்றமாம்.

66

என்றற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/217&oldid=1591550" இலிருந்து மீள்விக்கப்பட்டது