உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

191

தென் போல வோவெனின், மக்கள் யாக்கைக்குரிய றுப்புகளிற் கை கால் குறைந்த முடவரையும், கண்ணில்லாக் குருடரையும், காதில்லாச் செவிடரையும், வாயில்லா ஊமை யரையும் மிகக்குறுகிய குறளரையும் அம்மக்களின் வேறாந் தன்மை உடையரெனக் கோடல் யாண்டும் இல்லையானாற் போல வென்பது.வினையால் யாக்கைக்கு வரும் நோய் போலப், பழவினைப் பயத்தால் உறுப்புகளிற் குறைபாடுடையராய் அலி பேடி கூன் குருடு ஊம் செவிடு என்றற்றொடக்கத் தனவாகப் பிறப்பின் எச்சங்களாய்ப் பிறப்பவரும் ஆண்மை பெண்மை என்னும் இருகூற்றிலடங்கு வரன்றி இவ்விரண்டின் வேறான மூன்றாவ தொரு தன்மையில் அடங்குவாரெனக் கோடல் ஒரு சிறிதும் பொருந்தாதென்க. இங்ஙனமெல்லாம் ஆராய்ந்து காண்கின் றுழிக் கடவுள்நிலை ஆண்மை பெண்மை என்னும் இருதிறமாய் ஒன்றளாய் நிற்குமெனலே பொருத்தமும் உண்மையுமாமென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/216&oldid=1591549" இலிருந்து மீள்விக்கப்பட்டது