உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

  • LD60LD60QUUILD - 28 மறைமலையம்

கவர்த்த நெஞ்ச முடைய ராய் ஒழுகும் ஆண்மக்களும் அங்ஙனமே இழிக்கற் பாலரா மென்க. இத்துணையுங் காட்டியவாற்றால், ஆண் பெண் என்னும் உடம்பின் வேறுபாடு வினையால் வந்ததாகாமல், அவ் வுடம்பைப் பற்றும் உயிர்களே அங்ஙனம் இயற்கையாய் ஆண்மை பெண்மை என்னும் இருவகைத் தன்மை யுடைய வாயிருத்தலால் வந்ததாமென்பது முடிக்கப்படும் என்பது.

வ்வாறுலகத்துக் காணப்படும் உயிர்களிலேயே ஆண் பெண் என்னும் இருவேறியற்கை உளதாதல் போல, இவை தமக்கெல்லாம் முதல்வரான இறைவனிலும் இறைவி யிலும் அவ்விருவேறியற்கையும் உளவென்பது தேற்றமாம். இஃது யாங்ஙனம்! ஆணும் பெண்ணும் அல்லாக் கடவுளை அவை யிரண்டும் உடையதாகக் கூறுதல் வழுவாமல் எனின்; நன்று வினாவினாய், ஆணும் பெண்ணும் அல்லாமல் அலியாக மட்டும் கடவுள் நிற்குமென்றல் வழுவன்று போலும்! உலகத்துயிர்களுள்ளும் ஆணும் பெண்ணு பண்

மல்லாமல்

அலியாயும் பேடியாயும் நிற்பார் பயன்படுதலின் மையின் அவரை எல்லாரும் இழிந்துரைப்பவே காண்டும்; இங்ஙனம் இழித்து ரைக்கப்படும் அலித்தன்மை கடவுட்கு உண்டென் றலால் அதற்குப் போந்த பெருமை என்னையோ வெனக் கூறிமறுக்க. அல்லதூஉம், உலகின்மேலும் உயிர்கண் மேலும் வைத்தன்றி முழுமுதற் கடவுணிலை வேறொரு வாற்றானும் நம்மனோரால் அறியப்படாமையின், நம்ம னோர் தங்காட்சி கருதல் என்னும் அளவைகட்குப் புலனாம் ஆண்மை பெண்மை களும் கடவுட்கும் உண்டென்பது துணிதும்; அங்ஙனமே அலித்தன்மையும் கடவுட்குண் டெனத் துணிதற்கு ஒரு கருவி காணாமையின் அதனை ஏலாமென விடுக்க. அற்றன்று. ஆண்மை பெண்மையின் வேறான அலித் தன்மையும் பேடித் தன்மையும் ஒரோவழி உயிர்கண் மாட்டுக் காண்கின்றோமா லெனின், அறியாது வினாயினாய், ஆண்டன்மைக்குரிய உறுப்புக்களிற் சில குறைந்ததை அலி எனவும் பெண்டன்மைக் குரிய உறுப்புக்களிற் சில குறைந்ததைப் பேடி எனவும் வழங்குபவாகலின் அலி பேடி என்பன ஆண் பெண் என்னும் இரண்டின் வேறான இயல்புடையன வென்று கொள்ளற்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/215&oldid=1591548" இலிருந்து மீள்விக்கப்பட்டது