உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

189

முயற்சியில் அலைப்புண்டு, அம் முயற்சியிற் றமக்கு மாறாய் நிற்கும் பகைவராற் றுன்புறுத்தப்பட்டுக், க கவலையும் பாறாமையும் தம்முள்ளத்தை ஈர்ந்து தின்ன இறக்குந் துணையும் ஓவாத பேரிடர்க்கு உள்ளாவதன்றோ ஆண்பிறவி யெடுத்தாரின் நிலைமை யாயிருக்கின்றது! அஃதொன்றோ, அவர்தம் மனஞ்சென்றவா றெல்லாம் வழுவி யொழுகி நீரிழிவு, என்புருக்கி, குளிர் காய்ச்சல், கரியநாற்றப்படை, தொழுநோய் முதலான கொடிய நோய்களால் எளிதிற் பற்றப்பட்டுப் புழுத்தழுகி சாதலையுங் கண்கூடாய்க் காண்கின்றேமாகலின், ஆணுடம்பு துன்பம் அற்ற பிறவி யென்றும் அது நல்வினையால் வருவதென்றும் ஆராயாது கூறும் உரை ஆன்றோராற் கொள்ளற்பாலதன்றா மென்க. ஆண் பாலார் பெண்பாலார் என்னும் இரு திறத்தாரிலும் நோயும் பழுதான உறுப்பும் முடை நாற்றமும் இன்றி, அழகின் பொலிவும் திருந்திய உறுப்பும் நறுமணமும் தூய ஒளியும் வாய்ந்த இனிய யாக்கையைப் பெறுதலே நல் வினையா மெனவும், அவற்றிக்கு மாறான அருவருப்புடைய வுடம்பைப் பெறுதலே தீவினையாமெனவும் ஆராயந்து உணர்தலே எவ்வாற்றானும் பொருத்தமுடைத்தாம். பெண் மக்களும் அறிவானும் நல்லியற்கையானும் அழகானுஞ் சிறந்தாரை முற்றத்துறந்தோரும் ஏனையோரும் மிக உயர்த்துப் பாராட்டு தலைக் காண்கின்றேமாகலானும், இதற்குப் பெருங்கோப் பெண்டு ஔவையார் கண்ணகியார் காரைக் காலம்மையார் திலகவதியார் மங்கையர்க்கரசியார் பூம்பாவை யார் பரவையார் சங்கிலியார் முதலான பெரு மாட்டிமார்களே சான்றாகலானும் பிறவியளவில் இஃது யர்ந்தது. இது தாழ்ந்ததெனக் கூறுதல் ஒருவாற்றானும் ஏலா வுரை யாமென்க. அற்றேற், பட்டினத் தடிகள் தாயுமானார் முதலான சான்றோர் மாதரை மிக இகழ்ந்துரைத்துப் பாடிய தென்னையெனின், அறிவும் ஒருநிலைநின்ற அன்பும் இலராய்ப் பொருள் பறித்தலிலேயே வேட்கை மீதூர்ந்து அவ்வேட்கை நிரம்புமாறு ஆடவரைத் தம்மாட்டு வஞ்சித்து ஈர்த்து அவர் நலங்களை முற்றச் சிதைக்கும் பொருட் பெண்டிரையும் அவரோ பெ ாத்தாரையும் அங்ஙனம் அவர் இகழ்ந்து பாடியதல்லால் ஏனை நல்லாரை அவ்வாறு செய்திலரென்று கடைப் பிடிக்க. இனிப் னிப்பொருட் பெண்டி ரேயன்றி அவர் போற் பலதலையாற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/214&oldid=1591547" இலிருந்து மீள்விக்கப்பட்டது