உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

மறைமலையம் - 28

என்பது துணியப்படும்; என்னை? உடம்பின் கட் பலநெறியால் 2 இடையறாது வந்து சேரும் நச்சு நீர்களெல்லாம் பெண்ணுடம் பிற் றிங்கடோறும் புறம்படுதற்கு வாயில் உண்டானாற் போல ஆணுடம்பிற்கு அஃது இன்மையின் அந்நச்சுநீர்கள் அவ்வுடம்பிற் சுவறி எந்த நோயினையும் எளிதில் வருவித்தற்குப் பெரிதும் இடஞ் செய்து நிற்கின்றன; அந்நச்சு நீர்கள் பெண்ணுடம்பில் அவ்வப்போது கழிந்து விடுகின்றமையின் அவ்வுடம்பின்கண் நோய்கள் எளிதில் ஏறுவதில்லை. பெண்ணுடம்பை நோய்கள் எளிதிற் பற்றாமையும், ஆணு டம்பை அவை எளிதிற் பற்றுமாறும் நாடோறும் நிகழும் நிகழ்ச்சியில் வைத்துக் கண்டு கொள்க. இவ்வாற்றால் ஆணு டம்பினும் பெண்ணு டம்பே தூயதாதல் நன்கு தெளியப்படும்.

இனிக் கருக்கொள்ளல் கருச்சுமத்தல் முதலியவற்றைக் குற்றமாகவும் இழிவாகவும் நினைத்தலினும் பெரியதொரு பிழைபாடு வேறின்றாம். ஆணவ மறைப்பிற் கிடந்து சொலற்கருந் துன்பத்தை உழக்கும் உயிர்கள் அது நீங்குமாறு பிறவியைத் தரும் இறைவன்றன் கைம்மாறில்லாப் பேரிரக்கச் செயலுக்கு உதவியாய் நிற்கும் பெண்ணுடம்பினும் மேன்மை மிக்கது பிறிதொன்றில்லை. தான் சிறிது நேரந் துன்புறு மாயினும், ஆணவத்தாற் பிணிப்புண்டு அளவிறந்த துன்பத்தை எய்தும் உயிர்கள் அதுநீங்கிப் பிறவியெடுத்து அறிவும் ன்பமும் பெறுமாறு உதவி புரியும் பெண்ணுடம் பைப் பாவவுடம்பெனக் கூறுதலினும் பெரியதொரு பாவம் வேறில்லை. மேலும், பெண்மக்களாவார் அறிவில் வளர வளரத் துன்பம் இல்லாமலே கருவுயிர்க்கும் வழிதுறை களைத் தெரிந்து தமக்கும்தாம் பெறும் மக்கட்கும் மிகுந்த நலன்களை வருவித்துக் கொள்வர். அறியாமையிலுள்ள இந்நிலையினுங்கூடக் கருவுயிர்க்குங்காற் பட்ட துன்ப மெல்லாம் தாம் ஈன்ற பச்சைப் பசுங் குழவியின் எழில் துளும்பும் இன்முகங் காண்டலினும் அதன் ஆம்பற் செவ்வாற் முத்தங் கொள்ளுதலினும் யாழினுங் குழலினும் இனிய அதன் மழலை மொழிகளைக் கேட்டலினும் அறவே மறந்து அவர் இம்மைக்கண்ணே பேரின்பந் தலைப் படுகின்றனர். இவ்வின்பமெல்லாம் ஆண் மக்களாவார் காணப்பெறுவரோ? அல்லும் பகலும் பொருள் தேடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/213&oldid=1591546" இலிருந்து மீள்விக்கப்பட்டது