உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

187

விளங்கிய உயிர்கள் தம்மைப்பற்றி நிற்கும் ஆணவவயமாய் நின்று செய்யுந் தொழில்களே யாகு மென்பதை மேலே வி னையினியல்பு உரைத்தவழி நன்கு விளக்கிக் காட்டின மாதலானும், உடம்பெடுத்த பின்னன்றி வினைகள் உளவாதல் பெறப்படா மையின் வி னகள் பண்டேயுளவாய் உடம்புகளைத் தோற்றுவிக்குமென்றல் ஒரு சிறிதும் பொருந்தா தாகலானும் என்பது. இவ்வாற்றால் வினைக்கு முன்னே உடம்புகள் உயிர்கட்கு உளவாயினமை ஐயுறவின்றித் துணியப்படும். வினைகளைத் தோற்றுவித்தற்கும், தோற்று வித்த வினைப்பயன்களை நுகர்தற்கும் உடம்புகள் கருவியாய் நின்று உதவுதலைக் கண்கூடாய் நாடோறுங் கண்டு வருகின்றேமாகலின், இவ்வுடம்புகள் வரும் முன்னரே நல்வினை தீவினைகள் பண்டே உளவா மெனவும், அவை தமக்கிசைந்த ஆணுடம்பு பெண்ணுடம்புகளைத் தோற்று விக்குமெனவுங் கூறுதல் ஒரு சிறிதும் அடாது. அல்லதூஉம், நல்வினையால் ஆணுடம்பும் தீவினையாற் பெண்ணுடம்பும் வருமென்றல் காட்சி யளவைக்கு மாறாயிருக்கின்றது. ஆண்உடம்பு நல் வினையால் வந்ததாயின் அது நரைதிரை மூப்புப் பிணி சாக்காடு முதலான முதலான குற்றங்கள் இலவாதல் வேண்டும்; பெண்ணுடம்பைப் போலவே ஆணுடம்பும் அக்குற்றங்கள் உடையனவாய் அழிந்து படுதலைக் காண்கின்றோமாதலின் ஆணுடம்பு மட்டுமே நல்வினையால் வந்ததென்றல் மாறு கோளுரையாம். அற்றன்று, திங்க டோறும் புறக்கழிவாகிய வாலாமையுடைமையும், கருக் கொள்ளுதல் அதனைப் பத்துத் திங்கள் சுமந்து வருந்தல் அதனை யீனுங்காற் பெருந் துயருழத்தல் பின்னரதனை வளர்க்குங்காற் பெரிதுங் துன்புறல் முதலான குற்றங்கள் உடைமையும் பெண்ணுடம் பிற்கு இயல்பாக உளவாதல் போல ஆணுடம்பிற்கில்லா மையின் இது நல்வினையால் வந்தமை தேற்றமாமெனின்; அற்றன்று, மலம் சிறுநீர் சளி பீளை வியர்வு உயிர்ப்பு முதலான கழிவுகள் இருவகை யுடம்பினிடத்தும் பொது வாகக் காணப்படுவது போலப், புறக்கழிவு வாலாமையும் சிறப்பாகப் பெண்ணுடம்பி போலப்,புறக்கழிவு னிடத்தே காணப்படுவதாயிற்று. ஆணுடம்பிற் காணாத இவ்வாலாமை பெண்ணுடம்பிற் றிங்கடோறுங் காணப் படுதல் காண்டே, அஃது ஆணுடம் பினுந் தூய்மை யுடைத்தாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/212&oldid=1591545" இலிருந்து மீள்விக்கப்பட்டது