உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

மறைமலையம் - 28

களும் அவ்வவ்வுடம்புகளிலிருக்கும் உயிர்களின் இயல்பு களுக்கும் நினைவுகளுக்கும் இசையவே போதரலாயின வென்பது முடிக்கப்படும். கட்புலனாகா வாயினும், ஒரு சார் உயிர்கள் ஆண்டன்மையும் பிறிதொருசார் உயிர்கள் பெண்டன்மையும் இயல்பாக வுடைமையினாலன்றே அவ்வ வற்றின் தன்மைகளுக்கேற்ற உடம்புகள் இறைவனால் வகுத்துக் கொடுக்கப்படுவன வாயின. காரியத்தின்கட் புலப்பட்டுத் தோன்றும் வேறு பாடுகள் அத்துணையும் அதன் காரணத்தின் கட் புலப்படாத நுண்ணிய நிலையில் உளவாம் சற்காரியவாதங் கூறுஞ் சைவசித்தாந்த இயல்பினை நுணுகி ஆராய வல்லார்க்கு, உடம்பின் கட்புலனாம் வேறுபாடுகள் அத் துணைக்குங் காரணமான இயல்புகள் உயிரின்கண் உளவாதல் நன்கு விளங்காநிற்கும்.

எனச்

இவ்வா றெல்லாம் பகுத்தாராய்ந்து காண மாட்டாதார், அவ்வவ்வுயிர் கள் செய்யும் நல்வினை தீவினை கட்கீடாக உடம்புகள் வருமெனவும், நல்வினை செய்த உயிர்கள் ஆண் உடம்பும் தீவினை செய்த உயிர்கள் பெண் உடம்பும் எடுக்கு மெனவும், இவ்வாறு தத்தம் வினைக் கீடாக உடம்பெடுக்கும் வ்வளவே யன்றி உயிர்களுள் ஒருசாரன ஆண்மைத் தன்மையும் பின்னை யொருசாரன பெண்மைத் தன்மையும் இயற்கையேயுடையவா மென்றல் பொருந்தா தெனவுங் கூறுவாரும் உளர். ஆணவமலத் துண்மை கொள்ளாமல், வினையின் உண்மை ஒன்றுமே யுடம்பட்டு, அவ் வினையும் பண்டேயுளதாய் இருதிறப்பட்டு உயிர்கட்கு உடம்புகளைத் தோற்றுவிக்கும் என்னுங் கொள்கை யினரான புத்தர் சமணரே இங்ஙனங் கூறுதற் குரியாரன்றி, ஆணவ மலத்துண்மை கொண்ட சைவ சித்தாந்திகள் இவ்வாறுரைத்தற்கு இடம்பெற மாட்டார் என்க. எல்லாத் துன்பங் கட்குங் காரணமாய்ப் பண்டு தொட்டே உயிர்களின் அறிவு செயல் சயல் வேட்கைகளை மறைத்துக் கொண்டு செம்பிற் களிம்புபோல அவ்வுயிர் களோடு உடனாய் விரவி நிற்கும் ஆணவமல நீக்கத்தின் பொருட்டே உயிர்கட்கு முதல்முதல் உடம்புகள் வந்தனவன்றி வினையால் வந்தனவல்ல; என்னை? என்னை? வினைகளென்பன இறைவன் பொருத்திய உடம்பின் சேர்க்கையாற் சிறிதறிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/211&oldid=1591544" இலிருந்து மீள்விக்கப்பட்டது