உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

185

அல்லதூஉம், உலகத்துக் காணப்படும் உயிர்களெல்லாம் ஆண் பெண் என்னும் இருபகுப்பாய் அடங்கக் காண்டலின், தமக்கு முதலாம் முழு முதற்பொருளும் இரண் முடிக்கப்படுமென்பது.

இவர் னவே

அற்றன்று, ஆண் பெண் என்னுங் குறிகளும் அவ்வ வற்றிற் கேற்ற பண்புகளும் பருவடிவினவாகிய உடம்பு கட்கே உளவா வனவன்றி, இறப்பநுண்ணிய உயிர்கட்கும் அவை உளவா மென்றல் பொருந்தாதாலெனின்; நன்று சான்னாய், உலகத்தின்கட் காணப்படும் பருப் பொருள் அமைவு களெல்லாம் அவற்றை யாக்குவோர் இயல்பு களுக்கும் நினைவு கட்கும் ஏற்பவே அமைகின்றன வல்லாமற் பிறிதில்லை. உயிரின் நினைவைவிட்டும் இயல்பை விட்டும் ஆக்கப்படும் பொருளை யாண்டுங் கண்டிலேம். மிகச்சிறியது முதல் மிகப்பெரிய தீறான எல்லா அமைப்பு களும் அவற்றை அமைத்தவர் அமைப் பித்தவர் நினைவு களையும் இயல்புகளையும் தெற்றெனப் நி புலப்படுத்து கின்றன. தில்லை மன்றின்கட் காணப்படும் அமைப்புகளையும், பேரூர்க் கூத்தன் மண்டபத்தில் வகுக்கப் பட்ட உருக்களின் கூறுபாடுகளையும், மதுரைத் திருமலை நாயகன் அரண்மனை அரண்மனை யிலியற்றப்பட்டிருக்கும் ஓங்கிய கட்டமைப்பு களையுங் காண்பா ரெல்லாம் அவற்றை ஆக்கிய உயிர்களின் தன்மைகளையுங் கருத்துகளையும் விளங்க உணர் கின்றா ரல்லரோ? மலையமான் நாட்டிலிருந்து போதரும் திறஞ் சிறந்த யானைமருப்பின் உருக்களையும், எருமையூரிலிருந்து சாந்தமரத்துண்டுகளிற் செதுக்கிவரும் பலதிற நுண்ணிய வடிவு களையும், மேனாட்டின் கண் உள்ள வெண்ணிற மக்களால் அரிதின் அமைக்கப்பட்டு வருஞ் சலவைக்கல் வடிவங்களையும் ஓவிய உருவங்களையும் மகிழ்ந்து வியந்து காண்பாரெல்லாம் அவற்றை இயற்றிய உயிர்களின் அறிவின் திறத்தையும் அரும்பெருந்தன்மையையும் அறிந்து திகைக் கின்றனரல்லரோ? இன்னும் உலகின்கண் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளும் அவற்றை நிகழ்த்துவோர் இயல்பை யும் நினைவையும் ஒட்டியே நடை பறு மாற்றினை நுனித்துக் காண்பார் எவரும்

6

னிதுணர்வர். கண்கூடாய் நேரே யறியப்படும் இப்பிறழா முறை பற்றி, ஆண்பெண் உடம்புகளிற் காணப்படும் அமைவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/210&oldid=1591543" இலிருந்து மீள்விக்கப்பட்டது