உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

மறைமலையம் - 28

இறைவனோடு ஒருபுடையொத்த அறிவாற் றல்கள் வாய்ந்து மலசத்தி மட்டும் இயற்கையே சிறிதுடைய சதாசிவர் மகேசரும் அவருக்குத் துணைவரான மனோன் மணி மகேசை முதலிய சக்திகளும், இயற்கையே மல கன்மங்களாகிய இரண்டன் பற்று மட்டுஞ் சிறிதுடையராய் ஏனைவகையாலெல்லாம் இறைவனை ஒருபுடையொத்தவ ரான சீகண்டருத்திரரும் அவர்க்குத் துணைவியான உமையும் உளரெனக் கொள்ளுஞ் சைவ சித்தாந்த நுட்பங் கடைப்பிடித்துணர வல்லார்க்கு, இறைவனோ டொத்த இயல்பினளான இறைவியும் உடன்கலந்திருப்ப ளென்னு முண்மை பொருத்தமுடைத்தாதல் நன்கு விளங்கும், அல்லதூஉம், ஒன்றற்கொன்று மறுதலையான இரு தன்மை கள் ஒரு பொருட்கண் உளதாதல் எவ்வாற்றானும் இயலா தெனக் கொண்ட சைவசித்தாந்த வழக்கினை நுணுகிக் காணலுறின், ஆண்மை பெண்மை என ஒன்றினொன்று மறுதலைப்பட்ட இருதன்மைகள் இறைவனாகிய ஒரு பொருளினிடத்தே உளவெனக் கோடல் ஆகாமை தெற்றென விளங்கா நிற்கும். அதுவேயுமன்றி, உலகத்தின்கண் உள்ள எல்லாச் சமயத்தவருங் கட வுளை ஆண் பாலாகவுந் தந்தையாகவும் வைத்து வழங்கக் காண்டலின், பெண் பாலாகவும் உலகிற்கெல்லாம் அன்னை யாகவும் உள்ள இறைவியொருத்தியும் ஆண்டு அவனோடுடன் விராய் உளள் என்பதூஉந் தானே பெறப்படும், இறைவனைப் போலவே தனி முதலான இறைவி ஒருத்தியும் உண்மையி னாலன்றே அவ்விறைவியை மட்டும் வேறு பிரித்து வைத்து வழிபடுஞ் சாத்தம் என்னுஞ் சமயமும் பண்டு தொட்டே காணப்பட்டு வருகின்றது. இறைவி ஒரு தனி முதற்பொருள் ஆகாமல் இறைவற்கு ஒரு குணமேயாதல் உண்மையாயின், குணமுங் குணியும் ஒன்றேயெனக் கொண்ட சைவசித்தாந் தத்திற்கு அக்குணத்தை ஒரு பொருளாக்கி அதற்குப் பெண்மை முதலான வேறுபல குணங்களை ஏற்றியுரைத்தல் பெரிய தொரு மாறுபாடாய் முடியும், மேலும், சுத்தமாயையின் முடிந்த நிலைக்கண் அமைந்தவான சத்தி சிவதத்துவங்கள், சத்தியுஞ் சிவமுமாய இருமுழுமுதற் பொருள்கள் தம்மாட்டு விரவி நின்று முனைத்து விளங்குதலால் அங்ஙனம் பெயர் பெறலாயின வென்பதை ஆராய்ந்து காணலுறின், அவ் விரண்டனையும் இயக்கும் இரு முழுமுதற்பொருள்கள் உண்மை தேற்றமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/209&oldid=1591542" இலிருந்து மீள்விக்கப்பட்டது