உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

183

அவள் முதல்வன்பால் எல்லையற்ற காதற்கிழமை யுடையளா கலானும், அவ்விருவருந் தம்மைத்தாமே ஒப்பரல்லது அவர்க்கு ஒப்பாவது பிறிதொன்றின்மையானும் அவர் தமக்குள் அத்துணைச் செறிந்த அத்துவித இயைபு காணப் படுதல் இயற்கையேயாம் என்க. து பற்றியன்றே “பேரின்ப மான பிரமக் கிழத்தியோடு, ஓ ரின்பத்துள்ளான் எனவும், "நாடனைத்து நங்கையினாற் செய்தளிக்கும் நாயகனும்” பொன்னிறங் கட்டியினும் பூணினும் நின்றாற் போல், அந்நிறம் அண்ணலும் அம்பிகையும், செந்நிறத்தள், எந் நிறத்தாளா யிருப்பள் எங்கள் சிவபதியும் அந்நிறத்தனாய் இருப்பன் ஆங்கு” எனவும் உண்மைத் திருமொழிகள் எழுந்தன. இங்ஙனம் றைவற்குரிய அத்துவித இயைபு ஒருமுறையால் நோக்குமிடத்து மூவகைத்தாதலும் பிறி தொரு முறையால் நோக்குமிடத்து ஐவகைத்தாதலும் அறியற்பாலன. இறைவியோடும், உயிர்களோடும், மலமாயை களோடும் இயைந்து நிற்கும் முத்திற இயைபே, உயிர்கள் தூயனவும் தூயவல்லாதனவும் என இருதிறப்படுதலின் அவற்றிற்கேற்ப அவற்றில் நிற்கும் இறைவனது நிலையும் இருதிறப்பட, அங்ஙனமே மலத்தினும் மாயையினும் நிற்கும் நிலையும் இருதிறப்பட ஆக இம்முறையால் ஐவகைப் பாகு பாடுடை தாயிற்று. இவற்றுள் வற்றுள் இறைவியோடு நனிசெறிந்து நிற்கும் அத்துவித இயை 'பண்ணையும் ஓசையும்” என்னுந் திருவெண்பாவினும், தூய உயிர்களோடு விரவி நிற்கும் அத்துவித இயைபு அரக்கொடு சேர்த்தி' என்னுந் திருவெண்பாவினும், கட்டுற்ற உயிர்களோடு கலந்து நிற்கும் அத்துவித இயைபு “ஒன்றென்ற தொன்றே காண்” என்னுந் திருவெண்பாவினும், ஏனை மலமாயைகளோடு அவன் ஒட்டி நிற்கும் அத்துவித இயைபு “கட்டு முறுப்பும்” என்னுந் திருவெண்பாவினுமாக ஆசிரியர் மெய்கண்ட தேவ நாயனார் விளக்கியருளுமாறு காண்க.

66

அற்றேலஃதாக இறைவன் ஒருவன் உளன் என்றலே பொருத்தமாகக் காணப்படுகின்றதன்றி, அவனின் வேறாய் அவனோடொன்றாய் விரவி நிற்கும் பெண்டன்மை யினளான இறைவியும் உண்டென்றல் பொருத்தமாய்க் காணப்படுகின்றி லதாலெனின், அற்றன்று, றைவனுக்கு அணுக்கராய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/208&oldid=1591541" இலிருந்து மீள்விக்கப்பட்டது