உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

மறைமலையம் 28

நிறத்தை யறிந்து அவர்பால் நெகிழாத பேரன்பு பாராட்டு தலானன்றே நிகழப்பெறுகின்றன. அறிவும் அன்பும் இல்லாக் கால் அவர் தமக்குள் நெருங்கிய உறவு டையராதலும் இல்லை யாதல் காண்டுமன்றே. ஆதலால், இறைவன் தம்முள் நிறைந் திருப்பனேனும் தூயவல்லா உயிர்கள் அறியாமையாற் கவரப் பட்டுத் தம்மோடு உடனாய் நிற்கும் முதல்வனை ஒருசிறிதும் உணராமையின் ஆண்டு அவர் தமக்குள் நெருங்கிய உறவின்றாம், அதனால், இறைவன் மாசுமூடிய உயிர்களில் நிறைந்து நிற்கும் அத்துவித இயைபு மேற்கிளந்த இரண்டியை பினும் செறிவு நெகிழ்ந்த பதத்தினதாம் என்று தெளிக.

இனிக், கட்டுற்ற உயிர்களினுந் தாழ்ந்தனவாகிய மலம் மாயையெனும் இரண்டினும் நிறைந்து நிற்கும் இறைவனியைபு மேலெடுத்துக்கூறிய மூன்றியைபுகளினும் குறைந்த செறிவினை யுடைத்தாம். என்னை? இவையிரண்டும் அறிவில்லாத பருப் பொருள்களாகலின் என்பது அற்றாயினும், மலம் இருளின் இயல்பும் மாயை ஒளியின் இயல்பும் உடையவாகலின் மலத்தில் நிற்கும் இறைவனியைபு மிகக் குறைந்த செறிவினதாதலுடன் விளக்கமில்லதூஉமாம்; மாயையில் நிற்கும் இறைவன் இயைபோ விளக்கமுடையதாகலின் மலத்தினூங்கு மாயை யிலேயுள்ள இயைபு சிறிது செறிவுடைத்தாமென்க. அற்றேல், இவ்வாறு அவ்வப்பொருளின் றன்மைக்கேற்ப இறைவனது அத்துவித யைபு செறிவு குறைந்தும் ஏறியும் நிற்குமென்று ரைப்பின், அஃது அவற்கு வேறுபாட்டினைப் பயக்குமா லெனின், அறியாது கூறினாய், பளிங்கின்கண் விளங்கும் ஞாயிற்றின் ஒளி கருங்கல்லில் விளங்காமை பற்றி அவ்வொளிக்கு ஒரு குற்றமும் வராமைபோல, ஏனைத் தூயவுயிர்களினும் மாயையினும் ஏறியுங் குறைந்தும் விளங்கியும், மலத்தின்கட் சிறிதும் விளங்காமை நின்றும் இறைவனிருத்தல் பற்றி அவற்கோர் இழுக்கும் இன்றெனவுணர்க.

அற்றேலஃதாக, ஏனையெல்லாவற்றினும் இறைவற்கு இறைவிமாட்டுளதாகிய அத்துவித இயைபே மிக்க செறி னையுடைத்தாயது எற்றாலெனின்; தன்போன் முதன்மை யுடைய அறிவுப் பொருள் இறைவியையன்றி இறைவற்குப் பிறிதொன்று இன்மையானும், இன்ப வடிவினளாய் நிற்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/207&oldid=1591540" இலிருந்து மீள்விக்கப்பட்டது