உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

181

பாலன. இவ்வாற்றல் இறைவனும் இறைவியும் பொருட்டன்மை யால் வேறாயுங் கலப்பினால் ஒன்றாயுஞ் செறிந்து நிற்கும் இருமுதற் பொருள் களாதலும் இனிது பெறப்பட்டமை காண்க. பண்பிக்கும் அதன் பண்புக்கும் உளதாம் இயைபுபோல இறைவன் றைவியோடு அத்துணை நெருக்கமுறப்

பிணைந்திருத்தலால், அவனைக் குறிக்குமிடங்களினெல் லாம் மறை மொழிகள் அத்துவிதச் சொற்றலைப் பெய்து ஓதா நின்றன. எனவே, மிகச்செறிந்த அத்துவித இயைபு இறைவற்கும் இறைவிக்கும் உளதாதல்போல, ஏனைப் பொருள்கட்கும் இறைவற்கும் உளதாமாறில்லையென்று ஓர்ந்து கொள்க.

இனி, இறைவற்கும் ஏனையுயிர்கட்கும் உளதாகிய அத்துவித இயைபு மேலே காட்டிய இயைபினுக்கு அடுத்த நிலையில் வைத்து உரைக்கற்பாலதாம் செறிவு உடைத்தாம். இவ்வியைபுதானும் இறைவியின் வாயிலால் இறைவற்கு உளதா வதன்றி நேரே உளதாவதன்று. இது தெரித்தற் பொருட்டே ஆசிரியர் மெய்கண்டதேவர் “எங்கும்ஆம் அண்ணல் தாள்' என்று அடைகொடுத்தோதினார். இங்ஙனம் உயிர்களோடு இரண்டறக்கலந்து நிற்கும் வழியும் வீடுபெற்ற தூயஉயிர்களிற் செறிந்து நிற்குமாறு போல, மலக்கட்டுடைய ஏனையுயிர்களிற் செறிந்து நிற்பான் அல்லனென்பதூஉம் பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும். தூய உயிர்களில் இறைவன் நனி விரவி நிற்றலினாலன்றே, அவன் உலகெங்கு மாய் ஊடுருவி நிற்றல் போல அவர்தாமும் அவ்வாறு நிற்றலை உணர்ந் துரைப்பா ராயினர், வாமதேவ முனிவன் 'யானே உலகெல்லாமாயினேன்' என்றதூஉம், கண்ணன் முதல்வனது விரிந்த வுருவத்தைத் தான் காட்டியதூஉம் அவர் மாசு நீங்கி இறைவனோடு இரண்டறச் செறிந்து கூடினமை யாலேயாம். இதனையும் ஆசிரியர் மெய்கண்ட தேவர் “பிரிப்பதன்றித், தானே உலகாம் தமியேன் உளம்புகுதல் யானே உலகு என்பன் இன்று" என இனிது விளக்கி யருளினமை காண்க.

ஏனைத் தூயவல்லா உயிர்களிலும் இறைவன் நிறைந்து நிற்பனேனும் அந்நிறைவு மேலை இரண்டும் போல் மிக்க செறிவுடைத்தன்று.இவ்வுலகத்து வாழ்வாருள்ளும் இருவர்க்கு உளதாம் நெருக்கமெல்லாம் ஒருவர் மற்றொருவரின் அறிவின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/206&oldid=1591539" இலிருந்து மீள்விக்கப்பட்டது