உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

நாயனாரால்,

  • மறைமலையம் - 28

“பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும்

எண்ணுஞ் சுவையும்போல் எங்குமாம் -- அண்ணல்தாள் அத்துவிதம் ஆதல் அருமறைகள் ஒன்றென்னா

தத்துவிதம் என்றையும் ஆங்கு"

என்று இனிது விளக்கப்பட்டமையும் காண்க. இச் செய்யுட்கண் ‘அண்ணல்' என்பது இறைவனையும் ‘தாள்' என்பது அவனோ டிரண்டறக்கலந்து நிற்கும் இறைவியையும் உணர்த்தும். அவ்விருவர்க்குமுள்ள இயைபு பண்புக்கும் பண்பிக்குமுள்ள இயைபுபோல அத்துணை நெருக்க முடைத் தென்பது தெரிப்பார் பண்ணுக்கும் அதன் ஓசைக்கும் பழத்துக்கும் அதன் சுவைக்கும் உள்ள பண்புத்தற்கிழமை யியைபினை ஈண்டுவமை யாக எடுத்துக்காட்டினார். அங்ஙனங் காட்டியது கொண்டு, பண்ணும் ஓசையும் பழமுஞ் சுவையும் பண்பியும்அதன் பண்புமாய் ஒன்றாதல்போல, இறைவனும் இறைவியும் பண்பியும் அதனின் வேறன்றாம் பண்புமாய் ஒருவரேயாவர் போலுமென மாணாக்கன் ஐயுறாமைப் பொருட்டும், அவ்விருவரும் இருமுதற் பொருள்களேயாய் ஒருவரை விட்டு ஒருவர் பிரிதலின்றி எஞ்ஞான்றும் விரவிச் செறிந்தபடியாய் நிற்பரென்பதனை வலியுறுத்துதற்பொருட்டும் “அண்ணல் தாள் அத்துவிதமாதல்" என்று ஓதியவளவின் அமையாது ‘அருமறைகள்” ஒன்று என்னாது, அத்துவிதம் என்று அறையும் ஆங்கு என மேலும் அதனைத் தெளிவு படுத்தி ஓதியருளினா ரென்க. அதுவேயுமன்றி, வடமொழியில் வேதாந்த சூத்திரத் திற்கு உரை வகுத்த உரைகாரரெல்லாம் அத்வைதம் என்னுஞ் சொற்கு ஒன்றெனவே பொருள்கொண்டு மறை மொழிகள் முன்னொடு பின் பெரிதும் முரணிப் பிழைபடுமாறு பொருளுரைத்து இழுக்கினாராக, ஆசிரியர் மெய்கண்டதேவ நாயனார் ஒருவரே அத்துவிதம் என்ற சொல்லுக்கு அந்நிய நாத்தி அல்லது வேறு அன்மை என்னும் மெய்ப்பொருள் கண்டு மறைமொழிகள் ஒன்றோடொன்று மலையாவாறு பொருடந்து இணங்கக் கொளீஇயினா ரென்பதூஉம், அக் காரணம் பற்றியே அவர் அத்துவித மெய்கண்டநாதன் என ஆன்றோராற் பாராட்டி அழைக்கப் படுவாராயினாரென்பதூஉம் அறியற்

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/205&oldid=1591538" இலிருந்து மீள்விக்கப்பட்டது