உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

179

வாதல் இரண்டெனவாத லுரைத்தல் அமையாது. அங்ஙனம் அவனும் அவையும் வேறின்றி விரவி நிற்றலைத் தெரிக்கல் வேண்டின், அதனை ‘இரு தன்மை அன்மை' என்றேதான் கூறல்வேண்டும். இருதன்மை அல்லாத புணர்ப்பினையே ஆரியமறைகள் ‘அத்வைதம்' என்னுஞ் சொல்லால் வழங்கா நிற்கும்.

L

இவ்வாறு இறைவன் ஏனைப்பொருள்களோடுடன் கலந்து நிற்கும் அத்துவிதஇயைபு அவ்வப்பொருட்டன்மை யாற் சிறிது சிறிது வேறுபாடுடைய தென்பதூஉம் பகுத்துணர்தல் வேண்டும். இறைவற்கும் இறைவிக்கும் உளதாம் அத்துவித இயைபு ஏனைஇயைபுகள் எல்லாவற்றினுங் கழிபெருஞ் செறிவுடைத்தாம். அத்துணைச் செறிவுடைத்தாதல் பற்றியே, ஒருபண்புக்கும் அதனையுடைய பண்பிக்கும் உளதாம் தற்கிழமை இயைபினை அதற்கு உவமையாக எடுத்துக் காட்டுப.. உவமையாக எடுத்துக் காட்டிய பண்பும் பண்பியும் பற்றி அறிவு மயங்கிய ஒரு சாரார் இறைவன் ஒரு பொருளும் இறைவி அப்பொருட் பண்புமாம் என அவ்விரண்டன் இயல்பு தேராது பிழைபடக் கூறுவர். அவ்வா றுரைப்பிற் பண்புக்கும் பண்பிக்கும் உளதாம் தொடர்பினையும் அத்துவிதம் என வுரைத்தல் வேண்டும்; அத்தற்கிழமை யியைபினை அத்துவிதம் என வுரைப்பிற் பண்பும் பண்பியும் ஒருவாற்றானும் வேறல்லவாய் ஒன்றேயா மாகலின், அத்துவிதம் எனுஞ் சொல்லுக்கு இருமை யன்மை எனும் பொருள்போய், மாயாவதிகள் கூறும் ஒன்றென்னும் பொருளே கொள்ளப் பட்டு, முன்னையோர் கூறிய மறை மொழித் தொடர்ப் பொருள்களெல்லாம் பிழை பாடாய் முடியும்; ஆதலால், தனித்தனிப் பண்பிகளாம் .இருபொருட் கலவையே அத்து விதம் எனப்படுதற்கு ஏற்பதா மன்றிப், பண்புக்கும் பண்பிக்கும் உள்ள இயைபு அப்பெயர் பெறுதற்குச் சிறதும் ஏலாது. ஏலாதாகவே, மறைமொழிகள் “சிவம் அத்வைதம்” என்று ரைத்தது சிவம் என்னும் முழுமுதற் பொருள் தன்போன் முதற் பொருளாகிய சத்தியோடு நனிவிரவி வேற்றுமையின்றி நிற்கும் அத்துவித இயைபினைத் தெரித்தற் பொருட்டேயாம் என்க. இறைவற்கும் இறைவிக்கும் உளதாங்கழிபெருஞ் இவ்வத்துவித யைபு ஆசிரியர்

சிறப்பிற்

றாகிய மெய்கண்ட தேவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/204&oldid=1591537" இலிருந்து மீள்விக்கப்பட்டது