உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

9. அத்துவித இயைபு

சிவஞானபோதம் இரண்டாஞ் சூத்திரத்திற் கூறப்படும் அத்துவித இலக்கணம் இன்னதென்றாராயவே முதல்வனும் முதல்வியும் பிரிப்பின்றி விரவிநிற்கும் இயல்பு நன்கு விளங்கு மாகலின், அதனை ஈண்டொருசிறிது ஆராய்ந்துரைப்பாம். இறைவன் இறைவியோடும், உயிர்களோடும், உலகத்தோடும் வேறறக் கூடி நிற்கும் நிலையே அத்துவித

யைபாம். அத்துவிதம் என்பது ‘அத்வைதம்' என்னும் வட சொற்றிரி பாகும். அச்சொல் ‘ந’ ‘த்வைதம்' என்னும் இருசொற் புணர்ச்சியாலாயது. இவ்விரு சொல்லில் முன் நின்ற நகரம் அன்மை என்னும் பொருளையும், பின் நின்ற த்தைவதம் இருமை' என்னும் பொருளையும் தராநிற்கும்; இரண்டு சேர்ந்து 'இருமைஅன்மை' என்னும் பொருளையுணர்த்தும். இருபொருள் தனித்தனி வேறு நிற்குமாயின் அவை தம்மை ரண்டென்று உரைத்தல் வேண்டும்; அவை அங்ஙனம் நில்லாமல் ஒன்றோடொன்று கலந்து நிற்குமாயின் அவற்றை இரண்டென் றுரைத்தலுமாகாது, ஒன்றென்றுரைத்தலு மாகாது. உயிரும் உடம்பும் பிரிந்து நிற்புழி அவை தம்மை இரண்டென்று கூறுதல் பொருத்தமாம்; மற்று அவை ஒருங்குகூடி நிற்புழி அவற்றை ஒன்றெனவாதல் இரண் டெனவாதல் கூறுதல் ஒவ்வாதாம். இங்ஙனமே, இறைவன் ஏனையெல்லாப் பொருள்களையும் விட்டுத் தனித்து நிற்கு மாயின் அவனை ஒரு பொருளாயும் ஏனையவற்றையெல் லாம் ஒருங்கு தொகுத்து அத்தொகையை மற்றொரு பொருளாயும் உரைத்தல் ஏற்புடைத்தாம். மற்று இறைவனோ அவ்வாறு தனித்துநிற்பான் அல்லனாய்ப் பாலுள் நெய் போன்றும் பழத்துட் சுவை போன்றும் எல்லாப் பொருள்களினும் வேற்றுமையின்றிக் கலந்து நிறைந்திருப்பனாகலின், அவனையும் அவனோடு ஒன்றுகூடி நிற்கும் பொருள் களையும் ஒன்றென

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/203&oldid=1591536" இலிருந்து மீள்விக்கப்பட்டது