உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

205

என்பதை மேல் இனிதெடுத்து விளக்கினாமாகலின், விந்து ஒன்றுமே எல்லாவற்றிற்கும் முதலான தொழிற்பாடு உடைத் தாம். அஃது உடைத்தாகவே, விந்து ஒன்றுமே எல்லா ஓசைகட்கும் முதற் காரணமாம் என்க.

அற்றன்று, விந்துவும் அறிவில் பொருளேயாகலான் அதுவுந் தானாகவே இயங்கமாட்டாது. அஃது இயக்க முடைத்தாவதூஉம் இறைவனோடு ஒற்றித்து நிற்கும் இறைவி யால் இயக்கப்பட்ட வழியேயாம். அதனால், இறைவியே எல்லா ஓசைகட்கும் முதற்காரணமா மென்று ரைத்தல் வேண்டும்; அங்ஙனம் உரைப்பின், அறிவுருவின ளாய இறைவியுந் தொழிற் பாடு உடையளாம் என்று உரைக்க வேண்டுதலின், தொழிற் பாடுடைய ஏனை அறிவில் பொருள் போல வரையறைப்பட்டு இறைவியும் வேறுபாடுறுவள் போலுமென்று கொள்ளப் படுமாலோ வெனின்; நன்று கடாயினாய், மலத்தாற் கவரப்பட்டு மாயையிற் றுவக்குறும் நம்மனோர் சிற்றறிவுகள் நடைபெறும் முறையே பற்றித், தூயளாய் எல்லையற்ற அறிவின ளாகிய இறைவியினியக்கத்தை அளந்தறியப் புகுதல் பொருந் தாது. எல்லாப் பொருள்களின் உள்ளும் புறம்புமாய் எல்லை யற்று விரிந்து நிற்கும் அறிவுரு வினளாய இறைவி ஏனை வரையறைப் பொருள் போலத் தானும் இயங்கிப் பிறி தான்றனையும் இயக்குவள் என்றல் பொருந்தாது. இடத் தானுங் காலத்தானும் வரையறுக்கப்படும் பருப்பொருள் நுண்பொருள்களே ஓரிடத்தை விட்டுப் பிறிதோரிடத் திற்குப் பெயர்ந்து செல்வ தன்றி, அவற்றான் வரையறுக்கப் படாத விரிந்த அறிவுப்பொருள் அவ்வாறு வெல்வதின்று. அதனால், இறைவி தான் இயங்காமல் நின்றே விந்து மாயையை இயக்குவள் என்க. அஃது யாங்ஙனம்? தானும் இயங்கிப் பிறிதொன்றனையும் இயக்கும் முறையே எருது ஊருஞ் சகடை முதலியவற்றிற் கண்டனமாலெனின், அது பெரும்பாலும் ஒக்குமாயினும், சிறுபான்மை தான் இயங்காது நின்றே பிறிதொன்றனை இயக்குமாறும் உண்டென்பது இருந்தாங் கிருந்து இருப்பூசியை இழுக்குங் காந்தக் கல்லின்கண் வைத்துக் காணப்படும், அல்லதூஉம், நமதுடம்பினுள்ளிருக்கும் உயிர் தான் அசைவில்லதாய் இருந்தே அவ்வுடம்பின் அகத்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/230&oldid=1591564" இலிருந்து மீள்விக்கப்பட்டது