உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

மறைமலையம் 28

புறத்தும் உள்ள உறுப்புக்களை இயக்குந்தன்மையும் நம்மனோர் ஒவ்வொரு வரும் அறிந்ததொன்றேயாம். ஆகவே, எல்லாம் வல்ல இறைவி தான் அறிவுருவினளாய் அசையா திருந்தே, தன்னோடு ஒன்றியைந்து நிற்கும் விந்துமாயையை அசைத்து இயங்கச் செய்வளாகலின், அவள் அதுபற்றி வேறுபாடு சிறிதும் உறுவள் அல்லளென்க. இனி, அவள்தான் சிறிதும் அசை விலளாகலின், அசைவினாற் பிறக்கும் எழுத் தோசைகட் கெல்லாம் அவள் காரண மாதலுஞ் செல்லாது. எனவே, இறைவியால் உந்தப் பட்டுத் தானும் இயங்கிப் பிறபொருள் களையும் இயக்கும் விந்து வொன்றுமே எல்லா எழுத்தோசை கட்கும் முதற்காரண மாதல் பெறப்பட்டது.

அற்றன்று, இடைவெளியிலுள்ள அணுக்கள் ஒன்றை ஒன்று மோதுதலால் ஓசை உண்டாகின்றதென இஞ்ஞான்றை இயற்கைப்பொரு ணூலாரும் ஆராய்ந்துரைக் கின்றமையின், வான்வெளியே எல்லா எழுத்தோசைகளும் பிறத்தற்கிடமா மெனின்; நன்று கூறினாய்! எல்லாவுறுப்புக்க ளோடுங் கூடிய ஒருவன் ஓரிடத்திருந்து வாயைத் திறந்து கூறிய ஒரு சொல் இடைவெளியில் நின்ற அணுக்களை அசைத்து அவ்வாற்றாற் சிறிது எட்டநின்ற வேறொருவன் செவிக்கட்சென்று படுவதல் லாமல், எவரும் பேசாமலி லுருந்துழி அங்ஙனம் எழுத்தோ சைகள் இடைவெளியிற் றோன்றக் காணாமையின், எழுத் தோசைகட்குக் காரணம் இடைவெளியே யாமென்றல் பொருந்தாது. அவ்வாறு கோடலாகாது; புறத்தேயுள்ள இடை வெளியே பேசுவான் அகத்தும் உளதாகலின், அவனுள் நின்று எழூஉம் அவ் வோசைகள் இடைவெளியைக் காரணமாய்க் கொண்டு போதரும் என்பதே எமது கருத்தாமாலெனின்; உடம்பினுட் கருவிகளும் அவற்றை இயக்கும் உயிர்க்கிழவனும் வாளா திருந்துழி அகத்துநின்ற இடைவெளி அவ்வெழுத் தோசை களைத் தோற்றுவிக்குமோவெனக் கடாயினார்க்கு இறுக்கு மாறு இன்மையின், இடைவெளியே எழுத்தோசைகட் கல்லாங் காரணமாமென்றல் ஒருவாற்றானும் பெறப்படா தென்க.

அற்றேல், அகத்தும் புறத்துமுள்ள உடம்பினுறுப்புக் களும் அவற்றை இயக்கும் உயிர்க்கிழவனது முயற்சியுமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/231&oldid=1591565" இலிருந்து மீள்விக்கப்பட்டது