உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

207

லெனின்;

எழுத்தோசை கட்கெல்லாங் காரணமாதல் கண்கூடாய் அறியக்கிடத்தலின், அவற்றைவிடுத்து, அங்ஙனம் அறியப் படாத விந்து என்பதே அவற்றின் காரணமாமென்றல் யாங்ஙனமெனின்; உடம்பும் விந்துவினியக்கத்தினாலேயே படைக்கப்பட்டு, அஃது அசைக்கவே அசைந்து வருகின்றமை யின், விந்துவினின்று ஓர் எழுத் தோசை பிறக்குங்கால் வாயினுறுப்புக்களுள் அதற்கு ஏற்பன இயங்கி அதனைப் புலப்படுத்துகின்ற தென்க. அற்றன்று, உயிர்க் கிழவனது முயற்சியால் அவன் நினைந்த எழுத்தோசைக்கு ஏற்ப அவன் வாயுறுப்புக்கள் அசைந்து அதனைப் புலப்படுத்துகின்ற தென்றுரைத்தலே பொருத்தமுடைத்தா அஃதொவ்வாது, உயிர்க்கிழவன் உடம்பின் அகத்தே நின்றானேனும் ஆண்டுள்ள மிக வியப்பான உறுப்புக்களின் இயல்புகளையும் அவை தம்மை இயக்கு மாற்றினையும் ஒரு சிறிதும் உணரா னென்பதற்கு, நம்மனோரில் அருகழைத்து ‘நீர் எங்ஙனங் கண் விழித்துப் பார்க்கின்றீர்? நீர் பார்த்தற்குக் கருவியான நுமது விழி நும்முள்ளே எவ்வாறு அமைந்திருக்கின்றது?' என்று வினவினால் அவர் அதற்கு விடைபகரத் தெரியாமற் றிகைத்தலே சான்றாம். அதனால், உயிர்க்கிழவன் ஒன்றைச் சொல்ல நினைந்தவளவானே அவனோடு உடன் கலந்து நிற்கும் இறைவியின் அருளாற்றல் தன்னோடு ஒற்றித்துள்ள விந்து மாயையென்னும் மின்னை இயக்கி உதவ அம்மின் நரம்புகளின் வழியே கடிது ஓடி வாயினுறுப்புக்களை இயக்கித் தன்கட் பிறக்கும் எழுத்தோசை களைப் புலப் படுத்துகின்றதென ஓர்ந்து கொள்க. உயிர்க்கிழவன் வேண்டியதோரியக் கத்தினை அகப்புற உறுப்புக்களில் ஓடிச் சென்று அவற்றின்கண் விளைக்கும் ஆற்றல் மின்னாற்ற லோடு ஒத்ததாயிருக்கின்றதென இஞ்ஞான்றை மனநூலாருங்' கூறுதல்

காண்க.

எவரை

ச்

அற்றேல், வாயுறுப்புக்களின் இயக்கமே அவ்வெழுத் தோசை கட்கெல்லாங் காரணமா மென்று உரைத்துமெனின்; அது பொருந்தாது; வாயினுறுப்புக்கள் அவ்வெழுத்தோசை களைப் புலப்படுத்துதற்குரிய துணைக் கருவிகளேயல்லது அவற்றிற் சுவை முதற்

கருவியாகா. குடத்திற்கு

மண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/232&oldid=1591566" இலிருந்து மீள்விக்கப்பட்டது