உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

மறைமலையம் - 28

முதற்கருவியும், திகிரியுங்கோலுந் துணைக் கருவியும், குயவன் வினைமுதலுமாய்க் காணக் கிடத்தல் போல, எழுத்தோசை கட்கும் விந்து முதற்கருவியும், வாயினுறுப்புக்கள் துணைக் கருவியும், உயிர்க்கிழவனுந் திருவருளாற்றலும் வினை முதற் கருவியும் ஆம் என உணர்ந்து கொள்க. உண்ணின்று எழூஉம் ஓசையாகிய முதற்கருவி, வாயுறுப்புக்களின் பல்வேறு வகை யக்கத்தாற் பலவேறு வகை எழுத்தோசைகளாய்ப் பிரிவு பட்டுத் தோன்றா நிற்கின்றன வென்றுணர்ந்துகொள்க. அற்றாயின், வான் வெளியே ஓசையினை ஒரு பண்பாக வுடைத்து என்று நூல்கள் ஓதுமாறென்னையெனின்; ஓசைதான் இருவகைப் படும், எழுத்தோசையுங் குறிப்போசை யும் என இவற்றுள் எழுத்தோசை தான் விந்துவை முதற் கருவியாய்க் காண்டு வாயுறுப்புக்களாகிய துணைக் கருவியாற் றோன்றிப் பொருள் அறிவுறுப்பது; மற்றுக் குறிப்போசை யோ வான் வெளியை முதற்கருவியாய்க் கொண்டு மண் புனல் அனல் கால் என்னும் ஏனை நாற் பொருள் இயக்கத்தாற் றோன்றிப் பொருளறி வியாதாய் நிகழ்வது; மண்ணின் கட்டோன்றுங் குறிப் போசை கடகட நெடநெட முதலியன; புனலின் கட்டோன்றுங் குறிப்போசை களகள சலசல முதலியன; அனலின்கட் டோன்றுவன சடசட சரசர என்பன; காலின் கட்டோன்றுவன கஃறு சுஃறு என்பன வாம். இந்நாற் பொருளியக்கமின்றி இக்குறிப்போசை தானும் வெளிக்கட் டோன்றமாட்டாது. இது வான்வெளியை முதற்

வான்

வியாய்க் கொண்டு நிற்பினும், தான் றோன்றுதற்குக் காற்றினியக்கம் இல்வழி இவ்வோசை பிறர் செவிக்குப் புலனாகாது.ஒரு கண்ணாடிக் குடத்தினுள்ளே ஒரு மணியைத் தொங்கவிட்டு, அக் குடத்தின் வாயிற் காலுரிஞ்சு பொறி யைப்? பொருத்தி வைத்து, வெளிக்காற்று உள் நுழையாமல் உட் காற்றை வெளியே உறிஞ்சி வாங்கிய பின் உள் உள்ள அம் மணியை மின்னோட்டக் கம்பியால் இயக்க, அஃதியங்குவது கட்புலனாகு மேனும் அதன் ஓசை செவிப் புலனாகாது. இனிப் பெயர்த்தும் புறக்காற்றை அதனகத்தே செல்லவிடுத்து அம் மணியை இயக்கினால், அதன் ஓசை உடனே செவிப் புலனாகாநிற்கும். இவ்வாற்றாற், காலினியக்கமே வானின் கண் ஓசையைப் புலப்படுத்தற்கு இன்றியமையாத் துணைக் கருவியாதல் துணியப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/233&oldid=1591567" இலிருந்து மீள்விக்கப்பட்டது