உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

209

அற்றேல், வான்வெளி தான் இயக்க முடைத்தாதல் காணப் படாமை யானும் காற்றினியக்கத்தான் மட்டுமே ஓசை யுண்டாதல் துணியப் பட்டமையானும், காற்றொன்றுமே குறிப்போசைக்கு முதற் கருவியாதலோடு அதன் புலப் பாட்டிற்குத் துணைக்கருவியு மாம் என்று கோடும், இதனின் வேறாக வான்வெளியே அதற்கு முதற்கருவியாமென்று கோடற்குச் சான்று வேறுகண்டில மாலெனின்; அற்றன்று, வளி உளருங்கால் மெய்க்கட் சென்றுபட்டு ஊற்றுணர் வினைப் பயத்தலும், இடிமுழக்கம் முதலான வல்லோசை தோன்றிய வழியும் அது செவிக்கட் சென்றுற்றுப் புலனாதலே யன்றி மெய்க்கட்பட்டு உற்றுணர் வினைப் பயவாமையும் என்னை என நுணுகிக் காணலுறின் ஊற்று ணர்வுக்கு ஏதுவாகி அணுக் களினும், ஓசையுணர்வுக்கு ஏது வாகிய அணுக்கள்இறப்ப நுண்ணிய வாதல் நன்கு புலனா நிற்கும். ஆகவே, ஊற்றுணர் விற்கு முதலான வளியினும், ஓசையுணர்விற்கு முதலான வான்வெளி கழிபெரு நுண்மைத் தாதலும் பெறப்படும். இரு வேறுவகை நிகழ்ச்சி களுள் ஒன்று மற்றொன்றின் நுண்ணிய தாதல் நேரே புலனாதலின், இவ்விருவேறு நிகழ்ச்சிகளுக்கு முதற் கருவியாம் பொருள்களும் இருவேறுவகையவாதல் தானே பெறப்படு மாகலின், வான்வெளியுண்மைக்குச் சான்று இல்லையென அவ்வாறு கடாதல் பொருந்தாதென்றொழிக. என்றித்துணையுங் கூறியவாற்றாற் குறிப்போசைக்கு முதற் கருவியாவது வான் வெளியாமென்றும், எழுத் தோசைக்கு முதற்கருவியாவது விந்து மாயையே யாமென் றும் பகுத்து ணர்ந்து கொள்க. என்றிது காறும் ஓசை வடிவினவாகிய மந்திரம் பதம் வர்ணம் என்னும் மூன்று அத்துவாக்களின் இயல்புகளும் விளக்கப்பட்ட ன.

இனித் தத்துவம் புவனம் புவனம் கலை என்னும் ஏனை மூன்றத்துவாக்களின் இயல்புகளும் ஒருசிறிது விளக்கிக் காட்டுவாம். இம்மூன்றும், மேலெடுத்துக் காட்டிய சொற் களாற் குறிக்கப்படும் பொருட்டொகுதியா யிருத்தலின், இவை 'பொருள் உலகம்' என வழங்கப்படும். இவற்றுள், தத்து வாத்துவா வென்பது மேற்கூறிப்போந்த முப்பத்தாறு தத்துவங் களுமாகும். இம் முப்பத்தாறுள் சுத்தவித்தை, சுத்தவித்தை, ஈசுரம்,

ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/234&oldid=1591568" இலிருந்து மீள்விக்கப்பட்டது